பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவனின் தந்தை சிவன் மாரடைப்பால் காலமானார்.
மலையாள திரையுலகில் பிரபல ஒளிப்பதிவாளரான சிவன், அபயம், யாகம், கொச்சு கொச்சு மோகங்கள் உள்ளிட்ட படங்களையும் மலையாளத்தில் இயக்கியுள்ளார்.
புகைப்படக் கலைஞராக வாழ்க்கையைத் தொடங்கிய சிவன் ‘செம்மீன்’ திரைப்படத்தின் மூலம் மலையாள சினிமாவுக்குள் நுழைந்தார்.
நேற்று அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் நள்ளிரவு 12 மணியளவில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு காலமானார்.