சென்னை
திரையரங்குகள் வழக்கம் போல தொடர்ந்து இயங்கும் என திரையங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அமிராமி ராமநாதன் தெரிவித்துள்ளார்.
டிஜிடல் ஒளிபரப்பு நிறுவனம் கியூப் உடன் ஏற்பட்ட பிரச்னை உட்பட பல காரணங்களுக்காக வரும் 16ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) முதல் திரைப்பட படப்பிடிப்பு நடக்காது என அறிவிக்கப்பட்டது. அத்துடன் திரையரங்குகளும் இயங்காது என தகவல் வெளியானது. இது குறித்து திரையரங்கு உரிமையாளர்கள் கூட்டம் சென்னையில் நடந்தது.
அந்த கூட்டத்தின் முடிவில் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அபிராமி ராமநாதன், “திரைத்துறையினர் வேலை நிறுத்தத்தில் நாங்கள் கலந்துக் கொள்ளவில்லை. திரையரங்குகள் வழக்கம் போல இயங்கும். நாங்கள் பழைய தமிழ் படங்கள் மற்றும் ஆங்கிலம், இந்தி, தெலுங்கு போன்ற பிற மொழி படங்களை திரையிட உள்ளோம்” என தெரிவித்தார்.