திரைப்பட தயாரிப்பார்களே…  உங்களுக்கு வந்தா மட்டும் ரத்தமா?

Must read

மூத்த பத்திரிகையாளர் எஸ் கோவிந்தராஜ் அவர்களின் முகநூல் பதிவு:

இறைவி" பட இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் -  தயாரிப்பாளர திட்டும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இயக்குநர் எஸ்.ஜே. சூர்யா
இறைவி” பட இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் – தயாரிப்பாளர திட்டும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இயக்குநர் எஸ்.ஜே. சூர்யா

“இறைவி’ படத்தில் சினிமா தயாரிப்பாளர்களை விமர்சிக்கும் வகையில் வசனம், காட்சி இடம்பெற்றுள்ளதால், இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்க்கு தடை விதிக்கலாமா என தயாரிப்பாளர் சங்கத்தில் ஆலோசனை நடந்ததாகவும், இதற்கென ஒரு குழு அமைத்து ‘இறைவி’யை பார்த்து முடிவு செய்யவுள்ளதாகவும் செய்தி படித்தேன்.
பிரதமர், கவர்னர், முதல்வர், நீதிபதி, ராணுவ தளபதி, தொழிலதிபர், மருத்துவர், பத்திரிகையாளர் என சினிமாக்காரர்கள் வில்லனாக்காத துறையோ, மனிதர்களோ இல்லை. அநேகமாக ஜனாதிபதியை மட்டும் விட்டு விட்டார்கள் என்று நினைக்கிறேன். கவர்னர் வெடிகுண்டு வைத்து சட்டம் ஒழுங்கை சீர் குலைப்பது போன்று ஷங்கர் போன்றவர்கள் படம் எடுத்துள்ளனர்.
அப்படியிருக்க, சினிமா தயாரிப்பாளரை வில்லனாக சித்தரித்தால், தயாரிப்பாளர் சங்கம் குழு அமைத்து விசாரிக்கும் என்ற செய்தி ஆணவத்தின் உச்சகட்டம்.
இதே போல் ஒவ்வொரு சினிமாவுக்கும் குழு அமைத்தால், எல்லாரும் பொட்டியை கட்டிட்டு, அவங்க அவங்க பார்த்த தொழிலுக்கு திரும்ப போக வேண்டியிருக்கும் என்பதை தயாரிப்பாளர்கள் உணர வேண்டும்.
டூயட் போன்ற படங்களில் நடிகர் பாத்திரம் வில்லனாக சித்தரிக்கப்பட்டபோது, அதை நடிகர்கள் யாரும் எதிர்க்கவில்லை. குழு அமைத்து பார்த்து, இயக்குநருக்கு தடை போடுவது குறித்து பேசவில்லை. இதே போலத்தான் ஒவ்வொரு பாத்திரப்படைப்பும்.
இதே கார்த்திக் சுப்புராஜ் தனது முந்தைய படத்தில் இயக்குநர் நிராகரித்த ஒரு இளம் இயக்குநரை, தயாரிப்பாளர் கை கொடுத்து தூக்கி விடுவது போன்று படம் எடுத்தாரே. அப்போது தயாரிப்பாளர் சங்கம் அவருக்கு பாராட்டு விழா நடத்தியதா?
கார்த்திக் சுப்புராஜ் போன்ற இளையவர்களை, திறமைசாலிகளை, துணிச்சலானவர்களை, எதையாவது சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களை கை தூக்கி விட ரசிகர்கள், பத்திரிகையாளர்கள் தயாராக இருக்கின்றனர் என்பதை தயாரிப்பாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும். கார்த்திக் சுப்புராஜை ஒதுக்க நினைக்கும் தயாரிப்பாளர்களை திரையுலகமும், ரசிகர்களுமே ஒதுக்கி விடுவார்கள்.
உங்களுக்கு வந்தா ரத்தம்… எங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா?”

More articles

Latest article