1960ல் தேவாலயத்தில் இஸ்ரோ இயங்கியபோது, அதன் ஏவுதளமாய் இருந்தது கடற்கரை ராக்கெட்டின் பாகங்கள் பலிபீடத்தில் வைத்து ஒன்றிணைக்கப்பட்டன, விஞ்ஞானிகள் திருவனந்தபுரம் பிஷப் இல்லத்தில் வசித்து வந்தனர்.
1960 களில், இந்தியாவின் விண்வெளி திட்டம் துவக்கப்பட்டபோது கேரளாவில் உள்ள திருவனந்தபுரம் வடக்கு புறநகர் பகுதியான தும்பாவில் உள்ள ஒரு கடற்கரை தான் வானியல் குறித்த பல்வேறு பரிசோதனைகள் செய்யும் ஆய்வகமாக இருந்தது. டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் உள்ளிட்ட விஞ்ஞானிகள் பலரும் ஒரு கடற்கரை அருகே இருந்து ஒரு பாழடைந்த தேவாலயக் கட்டிடத்தில் இயங்கி வந்த அலுவலகத்தில் பணிபுரிந்தனர்.
பெங்களூரு சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் முன்னாள் இயக்குனரும், மற்றும், ஸ்ரீஹரிகோட்டா மற்றும் இஸ்ரோ செயற்கைக்கோள் மையத்தின் முன்னாள் இயக்குனருமான ராமபத்த்ரன் ஆராவமுதன் எழுதியுள்ள ஒரு புத்தகத்தில், இந்தப் பாழடைந்த தேவாலயம் குறித்தும் இந்திய விண்வெளியின் பயணத்தைக் குறித்தும் எழுதியுள்ளார்.
அந்தப் புத்தகத்தில் இருந்து :
அந்தக் காலக்கட்டத்தில் (1960), மிகவும்சொற்ப கான்கிரீட் கட்டிடங்கள் இருந்த படியால், இஸ்ரோ ஆரம்பக்காலத்தில் இயங்கி வந்த பாழடைந்த மகதலேனா மரியாள் தேவாலயம் மக்களின் கவனத்தை ஈர்த்த ஒரு மைய புள்ளியாக இருந்தது.
இந்தத் தேவாலயத்தின் வரலாறு மிகவும் சுவாரஸ்யமான ஒன்று.
உலகின் பல்வேறு பகுதியில் உள்ள பல புராதன தேவாலயங்கள் போன்றே, இந்தத் தேவாலயமும் பழமையானது. பதினாறாம் நூற்றாண்டில் புனித பிரான்சிஸ் சேவியர் கேரளா வந்தார். புனித பிரான்சிஸ் சேவியர் ஒரு வைராக்கியமான மிஷனரியாய் இருந்து இந்தக் கடற்கரையை ஒட்டி வாழ்கின்ற மீன்பிடிக்கும் சமூகங்களின் பலரை கிறித்துவ மதத்திற்கு மாற்றினார். மண் சுவர்கள் மற்றும் தென்னை ஓலையினாலான கூரை கொண்டு கட்டப்பட்ட ஒரு பிரார்த்தனை கூடம் கிட்டத்தட்ட நூறு ஆண்டுகளுக்கு நீடித்தது.
செயின்ட் பர்த்தலமேயு நினைவாய் ஒரு தேவாலயம் கட்டப்பட்டது.
இருபதாம் நூற்றாண்டுவாக்கில் தற்போது இருக்கும் மகதலேனா மரியாள் தேவாலயம் கட்டப்பட்டது
தேவாலயக் கட்டிடம் கட்டி கொண்டிருந்த போது மீனவர்கள் கடற்கரையில் மகதலேனா மரியாளின் அழகான சந்தன சிலை கண்டெடுத்தனர். இந்தச் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு புதிய தேவாலயத்தின் பலிபீடத்திற்கு வைக்கப்பட்டது. கடலிலிருந்து கரை ஒதுங்கிய வழக்கத்திற்கு மாறான, மிக நீண்ட “மரக்கட்டை” ஒன்றை கொடிமரமாக நட்டு தேவாலயத்தில் செயல்படத் துவங்கியது.
நாங்கள், இஸ்ரோ அலுவலகமாக இந்தத் தேவாலயத்தை ஆக்கிரமித்த போது இந்தக் கிறுஸ்தவ திருச்சபை கட்டிடம் பாழடைந்து சில செங்கல் மற்றும் சிமென்ட் கலவை கொண்ட சிதிலமடைந்த கட்டமைப்புகளாய் இருந்தது. அது ஒரு சுமாரான அளவு தேவாலயமாக இருந்தாலும், அவ்விடத்தில் ஒரு சிறப்புச் சக்தி இருந்தது.
அந்த இடத்தில் வழிபாடு நிறுத்தப்பட்டுவிட்டாலும், எங்களைப் போன்ற இஸ்ரோ முன்னோடிகளுக்கு இது தான் கோவில். அங்குதான் நாங்கள் பல அற்புதமான திட்டங்களைத் தீட்டினோம்.
பரிசுத்த தேவாலயத்தின் உயர் கூரை, புறாக்களின் கூடமாக இருந்து.
ஆரம்ப காலத்தில் நாங்கள் புராக்களின் இறகுகள், எச்சத்தோடு தான் பணி செய்ய வேண்டி இருந்த்து.
மகதலேனா மரியாளின் சிலைக்கு முன்னால் பலிபீடப் பகுதி எந்தப் மாற்றமும் செய்யப்படவில்லை. ஏனெனில், மீனவர்களுக்குச் சிலையையும் அந்த அந்தப் பகுதியையும் இடிக்கமாட்டோம் என வாக்குறுதி அளித்திருந்தோம்.
நைக்-அப்பாச்சி உட்பட ஆரம்பகால ராக்கெட்டுகள் பலவும் அந்தப் பலிபீடத்தின் முன் தான் தயாரிக்கப் பட்டன. திருச்சபையின் மைய பகுதி தான் பரபரப்பாக இயங்கும் அலுவலக இடமாக மாறியது. பின்னர், கூட்டங்கள் புதிதாகக் கட்டப்பட்ட ராக்கெட் சட்டசபை மண்டபம் நடந்தது.
பின்னர், தேவாலயத்தில் பல்வேறு பகுதிகள் புதிதாய் பணிக்குச் சேரும் விஞ்ஞானிகள் மற்றும் ஊழியர்கள் தற்காலிகமாகத் தங்கும் தங்குமிடங்களாக பயன்படுத்தப்படுகிறது.
1960 களில், வெலி ஹில்ஸ் அருகில் ஒரு விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம் துவங்க திட்டமிட்டவுடன், வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் மற்றும் ஆய்வகங்களிலிருந்து ஆராய்ச்சி பணிக்கு விஞ்ஞானிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களில் பலர் மதிப்புமிக்க வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் பேராசிரியர்கள் மற்றும் முனைவர் பட்டம் பெற்றவர்கள் . அவர்கள் நேரடியாக வெளிநாட்டிலிருந்து, குடும்பம் சகிதமாக மூட்டை முடிச்சுகளுடன் திருவனந்தபுரம் வந்தது விட்டனர்.
முகம் சுளித்துக்கொண்டே பலர் இங்கு பணிபுரியச் சேர்ந்தாலும், காலப்போக்கில் இந்த இடமே எங்களின் இல்லமாகவும், புறாக்கள் எங்கள் குடும்ப உறுப்பினராகவும் மாறிபோனது.
இப்பொழுது உள்ள இஸ்ரோ கட்டிடங்கள் அனைத்தும் கடலுக்கு மிக அருகிலேயே உள்ளன. எனக்குத் தோன்றும்போதெல்லாம் சிறிது நேரம் கடற்கரையில் நடந்து சென்று நேரம் கழிப்பேன். இங்குள்ள மீனவர்கள், இன்றும் தங்கள் வலைகளை உலர்த்துவது, மீன்கள் காயவைப்பது என கடற்கரையைப் பயன்படுத்திவருகின்றனர். விண்ணில் ராக்கெட் செலுத்தும் நாட்களின்போது மட்டும் இடத்தை நாங்கள் பயன்படுத்த விட்டுக்கொடுத்துக் காலி செய்வர்”
(ஆர். ஆராவமுதனின் :இஸ்ரோ: என் சுய அனுபவம்” எனும் நூலிலிருந்து)