பெங்களூரு,
கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி கர்நாடக மாநிலம் பெங்களூரில் சர்வதேச கேக் கண்காட்சி நடைபெற்று வருகிறது.
பெங்களூருவில் 42வது சர்வதேச கேக் கண்காட்சி நடைபெற்று வருகிறது. இதில் பல வகையான கண்ணை கவரும் கேக் வகைகள் வைக்கப்பட்டுள்ளன.
இந்த கேக் கண்காட்சியில், புகழ்பெற்ற லண்டன் பிரிட்ஜ் வடிவத்திலான‌ கேக் 500 கிலோ எடையில் வடி வமைக்கப்பட்டுள்ளது. இந்த கேக் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

லண்டன் பிரிட்ஜ் வடிவ கேக்

சுமார்  500 கிலோ எடையில் 24 அடி நீளம் மற்றும் 7 அடி உயரத்தில் தத்ரூபமாக லண்டன் பிரிட்ஜ் வடிவமைப்பிலான  கேக்கை நிபுணர்கள்  தத்ரூபமாக வடிவமைத்துள்ளனர். இதை 50 கலைஞர்கள் இணைந்து செய்ததாக கண்காட்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
இதே போல் 7.5 அடி உயரத்தில் செய்யப்பட்ட சீன டிராகன் வடிவிலான கேக் பிரம்மாண்டமாக காட்சியளிக்கிறது.
டிராகன் வடிவ கேக்

மேலும்  தஞ்சை ஓவியம், கிடார், கார், மயில் உள்ளிட்ட 23 வகையான கேக்குகள் இந்தக் கண்காட்சியில் காட்சிப் படுத்தப்பட்டுள்ளன.
கேக் கண்காட்சியைக் காண நூற்றுக்கணக்கான  பொதுமக்கள் மற்றும்  கேக் பிரியர்கள் குவிந்து வருகின்றனர். இந்த கண்காட்சி வரும் புத்தாண்டு வரை நடைபெறுகிறது.