நியூசிலாந்தில் உள்ள மசூதியில் நடைபெற்ற துப்பாக்கிக் சூட்டில், பங்களாதேசத்தை சேர்ந்த கிரிக்கெட் வீரர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியனர். இது பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
பங்களாதேஷ் கிரிக்கெட் அணியினர் நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர். அங்கு பல்வேறு போட்டிகளில் விளையாடி வருகின்றனர்.
இந்த நிலையில், நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் நகரில் மஸ்ஜித் அல் நூர் என்ற மசூதியில், இன்று வெள்ளிக்கிழமை என்பதால் காலையிலேயே ஏராளமான இஸ்லாமியர்கள் தொழுகையில் ஈடுபட்டு வந்தனர்.
உள்ளது. இன்று வெள்ளிக் கிழமை என்பதால், இங்கு சுமார் 300-க்கும் மேற்பட்டவர்கள் தொழுகை யில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். இந்த மசூதியில் நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து பங்களாதேஷ் கிரிக்கெட் அணியை சேர்ந்த சில வீரர்களும் அங்கு தொழுகை நடத்த சென்றனர்.
அவர்கள் தங்கியிருந்த ஓட்டலில் இருந்து அவர்கள் ஒரு பேருந்தில் சென்று, மசூதி அருகே இறங்கி உள்ளே நுழையும் சமயத்தில், மசூதியினுள் பயங்கர துப்பாக்கி சத்தம் கேட்டது. அதைத்தொடர்ந்து மரண ஓலங்கள்….
இதைக்கண்ட பங்களாதேஷ் வீரர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்களை காவல்துறையினர் தரையில் படுக்க வைக்க வைத்து, சற்று நேரத்தில் அங்கிருந்து, ஓட்டலுக்கு திருப்பி அழைத்துச் செல்லப்பட்டனர். இந்த துப்பாக்கி சூட்டில் பலர் பலியானதாக கூறப்படுகிறது.
இந்த துப்பாக்கி சூடு தொடர்பாக 4 பேரை கைது செய்திருப்பதாக காவல்துறை தெரிவித்து உள்ளது.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பங்களாதேஷ் அணியின் செய்தி தொடர்பாளர் ஜலால் யூனுஸ் பங்களாதேஷ் கிரிக்கெட் அணியினர் நலமாக இருப்பதாகவும், ஆனால் மனரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். என்று கூறி உள்ளார்.