ஐஜி அலுவலகம் அருகே வழக்கறிஞருக்கு அரிவாள் வெட்டு!

சென்னை,

சென்னை கடற்கரை ஐஜி அலுவலகம் அருகே உள்ள கலங்கரை விளக்கம் அருகே வழக்கறிஞர் ஒருவரை மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டினர்.

இன்று காலை சுமார் 8.30 மணி அளவில், மக்கள் நடமாட்டம் நிறைந்த பகுதியில் இந்த சம்பவம் நடைபெற்றது அந்த பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

இன்று காலை  கலங்கரை விளக்கம் ரயில் நிலையம் அருகே வந்துகொண்டிருந்த வழக்கறிஞரை, இரண்டு இரு சக்கர வாகனத்தில் வந்த 5 பேர் அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடினர்.

இதைகண்ட அந்த பகுதி மக்கள் மற்றும் ரெயில் பயணிகள் அலறியடித்து ஓடினர்.  பட்டப்பகலில் வழக்கறிஞரை  அரிவாளால் வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

வழக்கறிஞர் பெயரி கேசவன் என்று கூறப்படுகிறது. படுகாயம் அடைந்த கேசவன் ஆபத்தான நிலையில்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

போலீசார் இதுகுறித்து விசாரணை செய்து வருகின்றனர்.


English Summary
chop the lawyer by some unidentified person near IG office