திருவனந்தபுரம்

கேரள அரசு பிரபல திரைப்பட பின்னணி பாடகி சித்ராவுக்கு இந்த வ்ருட ஹரிவராசனம் விருது வழங்க உள்ளது.

கடந்த 2012ஆம் வருடம் கேரள அரசின் சார்பில் ஹரிவராசனம் என்னும் கவுரவ விருது ஒன்றை அறிமுகப்படுத்தியது.   இந்த விருது இதுவரை திரைப்படப் பாடகர்களான ஏசுதாஸ்,  ஜெயச்சந்திரன், எஸ் பி பாலசுப்ரமணியம்,  எம் ஜி ஸ்ரீகுமார்,  கங்கை அமரன் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது.   இந்த விருதுடன் ரூ. 1 லட்சம் ரொக்கப் பணம், நினைவுப் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது.

தற்போது 2017ஆம் வருடத்துக்கான ஹரிவராசனம் விருது திரைப்பட பின்னணி பாடகி சித்ராவுக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.     மதச் சார்பின்மை, மன அமைதி மற்றும் சகோதரத்துவம் ஆகியவற்றில் சித்ரா  பங்காற்றியதற்காக இந்த விருதுக்கு தேர்ந்தெடுக்கப் பட்டதாக கேரள மாநில அறநிலைய அமைச்சர் சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.   ஓய்வு பெற்ற நீதிபதியும் சபரிமலை உயர்மட்டக் குழு தலைவருமான ஸ்ரீஜெகன் இந்த விருதுக்கு சித்ராவை தேர்ந்தெடுத்துள்ளார்

வரும் ஜனவரி மாதம் 11ஆம் தேதி நடைபெற உள்ள அரசு விழாவில் இந்த விருது சித்ராவுக்கு வழங்கப்படும் என அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.