
மலையாளத்தில் மோகன் லால் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் லூசிஃபர். லூசிஃபர் திரைப்படத்தை தெலுங்கில் ரிமேக் செய்வது குறித்து அறிவிப்பு வெளியானது. ஆந்திரா சூப்பர்ஸ்டார் சிரஞ்சீவி இத்திரைப்படத்தில் ஹீரோவாக நடிக்கிறார்.
இயக்குநர் மோகன் ராஜா இப்படத்தை இயக்குகிறார் .மோகன் ராஜா இயக்கத்தில் பிரமாண்டமாக தயாராக உள்ள இந்த சிரஞ்சீவி 153 திரைப்படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் R.B.சௌத்ரி தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. S.தமன் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
மேலும் இத்திரைப்படம் முழு ரிமேக்காக இருக்காது எனவும், ஒரு தழுவலாக மட்டுமே இருக்கும் எனவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் சிரு 153 படத்தின் டைட்டில் மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் பிறந்த நாளான இன்று வெளியானது. இத்திரைப்படத்திற்கு காட்ஃபாதர் என பெயரிடப்பட்டுள்ளது. தற்போது வெளியாகியுள்ள காட்பாதர் படத்தின் டைட்டில் போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
[youtube-feed feed=1]Here’s the motion poster#GodFather @KChiruTweets@jayam_mohanraja @AlwaysRamCharan #RBChoudary @ProducerNVP @KonidelaPro @SuperGoodFilms_ @MusicThaman @SureshSRajan#Chiru153 #HBDMegaStarChiranjeevihttps://t.co/IFAVdtguwK
— Mohan Raja (@jayam_mohanraja) August 21, 2021