கடந்த அக்டோபர் மாதம் காதலன் கவுதமை திருமணம் செய்து கொண்ட நடிகை காஜல் அகர்வால், மாலத்தீவுக்கு ஹனிமூன் சென்று விட்டு, அண்மையில் மும்பை திரும்பினர்.

 

நீண்ட இடைவெளிக்கு பிறகு அவர், நேற்று ஐதராபாத்தில் நடைபெற்ற ‘ஆச்சார்யா’ படப்பிடிப்பில் கலந்து கொண்டார். இந்த படத்தில் காஜல், சிரஞ்சீவி ஜோடியாக நடிக்கிறார்.

கொரோனாவால் எட்டு மாதங்கள் முடங்கி கிடந்த ஆச்சார்யா ‘ஷுட்டிங்’ சில நாட்களுக்கு முன்பு தான் ஆரம்பமானது. படப்பிடிப்பு தளத்துக்கு கணவன் கவுதமுடன் வருகை தந்த காஜலுக்கு, படக்குழுவினர் பூங்கொத்து கொடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

சிரஞ்சீவி உள்ளிட்டோர் முன்னிலையில் புதுமணத்தம்பதி ‘கேக்’ வெட்டி மண நாளை கொண்டாடி மகிழ்ந்தனர். இருவரும் மாலை மாற்றிக்கொண்டு, படக்குழுவினருடன் ஒன்றாக புகைப்படம் எடுத்துகொண்டனர்.

இந்த படத்தில் சிரஞ்சீவி மகன் ராம்சரண், கவுரவ வேடத்தில் நடிப்பதாக முதலில் கூறப்பட்டது. ஆனால் அப்பாவுடன், படம் முழுக்க வரும்படியாக ராம்சரண் கேரக்டர் விரிவு படுத்தப்பட்டுள்ளது.

– பா. பாரதி