கன்னடத் திரைத்துறையில் போதைப் பொருள் பயன்பாடு பற்றிப் பேசி சர்ச்சையைக் கிளப்பியவர் இந்திரஜித் லங்கேஷ்.

போதைப் பொருள் விவகாரம் தொடர்பாக நடிகை ராகினி உள்ளிட்ட இன்னும் சிலரைக் கைதும் செய்துள்ளது.

இதனிடையே இளம் நடிகர் சிரஞ்சீவி சர்ஜா மரணம் குறித்து லங்கேஷ் கேள்வி எழுப்பியிருந்தார். இதனால் துக்கத்தில் இருக்கும் வேளையில், அதிகமாகக் காயப்படுத்தியுள்ளன என்றும், லங்கேஷ் மன்னிப்பு கோர வேண்டும் என்றும் சிரஞ்சீவி சர்ஜாவின் மனைவி மேக்னா ராஜ், கன்னட திரைப்பட சங்கத்துக்குக் கடிதம் எழுதினார்.

இதற்கு தற்போது லங்கேஷ் மன்னிப்பு கோரியுள்ளார்.

எனது வார்த்தைகளால் காயப்படுத்தியிருந்தால் மேக்னா ராஜுக்கும், அவரது குடும்பத்துக்கும் எனது மன்னிப்பைக் கேட்டுக் கொள்கிறேன்.

சிரஞ்சீவி சர்ஜாவுக்கு போதை மருந்து விவகாரத்தில் தொடர்புள்ளது என்று நான் சொல்லவில்லை. 37 வயதில் ஒரு இளம் நடிகர் இறக்கும் போது, போஸ்ட்மார்ட்டம் செய்திருக்க வேண்டும் என்றே சொன்னேன்.

போதை மருந்து விவகாரத்தில் நான் ஒட்டுமொத்த துறையையும் குற்றம் சாட்டவில்லை. தொடர்ந்து நான் குரல் கொடுப்பேன்” என்று லங்கேஷ் கூறியுள்ளார்.