தராபாத்

டிகர் சிரஞ்சீவு இனி அரசியலில் இருந்து விலக உள்ளதாக அறிவித்துள்ளார்.

தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டாரான சிரஞ்சீவி இதுவரை 150 க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார். இவருக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இவர் கடந்த 2008 ஆம் ஆண்டு பிரஜா ராஜ்ஜியம் என்ற கட்சியை தொடங்கி 2009 ஆம் ஆண்டு ஆந்திர சட்டமன்ற தேர்தலில் பேட்டியிட்டு சட்டப்பேரவை உறுப்பினரானர்.

சினிமாவில் இருந்து விலகி அரசியலில் கவனம் செலுத்திய சிரஞ்சீவி கடந்த 2011 ஆம் ஆண்டு தனது கட்சியினை காங்கிரஸ் கட்சியோடு இணைத்ததுடன். ஒரு சில பிரச்சினைகளால் முழுமையாக அரசியலில் இருந்து விலகினார். இஅண்மையில், நடிகர் சிரஞ்சீவி ‘பிரம்மானந்தம்’ படத்தின் வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

விழாவில் சிரஞ்சீவி,

“நான் அரசியலுக்கு திரும்புவேன் என்று சிலர் நினைக்கிறார்கள். இனிமேல் நான் வாழ்நாள் முழுவதும் அரசியலில் இருந்து விலகி இருக்க போகிறேன். என் இதயத்திற்கு நெருக்கமான சினிமாவில் மட்டும் முழு கவனம் செலுத்த இருக்கிறேன்., எனது இலக்குகள் அனைத்துமே பவன் கல்யாணால் நிறைவேற்றப்படும்

எனத் தெரிவித்துள்ளார்