பாட்னா: பீகார் சட்டசபை தேர்தலில் ஐக்கிய ஜனதா தளத்துடன் கூட்டணி இல்லை என்று லோக் ஜன சக்தி கட்சி அறிவித்துள்ளது.
பீகார் சட்டசபைக்கு தேர்தல் வரும் 28-ந்தேதி, நவம்பர் 3ம் தேதி, 7ம் தேதி என 3 கட்டங்களாக தேர்தல் நடக்க உள்ளது. முதல் கட்ட தேர்தலை சந்திக்கிற 71 தொகுதிகளில், வேட்புமனு தாக்கல் தொடங்கி உள்ளது. 2ம் கட்ட தேர்தலை சந்திக்கும் 94 தொகுதிகளில் 9ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது.
இந் நிலையில், ஐக்கிய ஜனதா தளம் கட்சி உடனான கருத்து வேறுபாடு காரணமாக இணைந்து போட்டியிடவில்லை என்று லோக்ஜன சக்தி விளக்கமளித்துள்ளது.
தேசிய அளவிலும், லோக்சபாவிலும் பாஜகவுடன் அமைத்த வலுவான கூட்டணி மேலும் தொடரும் என்றும், சட்டசபை தேர்தலில் மட்டும் கூட்டணியில் இருந்து விலகி போட்டியிடுவதாகவும் அறிவித்துள்ளது.
கட்சி நிர்வாகிகள் உடன் ஆலோசனைக்கு பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக லோக் ஜன சக்தியின் தலைவர் சிராக் பாஸ்வான் இதனை அறிவித்துள்ளார்.