டெல்லி: இந்தியாவில் தயாரிக்கப்படும் மிகச்சிறிய சிப் உலகின் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் நாட்கள் வெகு தொலைவில் இல்லை என்று பிரதமர் மோடி கூறினார்.
சிப் சிறியதாக இருக்கலாம். ஆனால் உலகின் முன்னேற்றத்துக்கு தேவையான சக்தியை அது கொண்டுள்ளது. கடந்த நூற்றாண்டை எண்ணெய் தீர்மானித்தது. அடுத்துவரும் நூற்றாண்டை சிப் தீர்மானிக்கப்போகிறது. எண்ணெய் கருப்பு தங்கம் என அழைக்கப்படுகிறது. அதே நேரம் இந்த சிப்கள் டிஜிட்டல் வைரங்கள் என அழைக்கப்படும். சீர் திருத்தம், செயல்திறன் மற்றும் மாற்றம் என்ற மந்திரத்தை இந்தியா பின்பற்றி வருகிறது.

டெல்லியில் உள்ள யஷோ பூமியில் செமிகான் இந்தியா 2025 மாநாடு நடைபெற்று வருகிறது. செப்டம்பர் 2 முதல் 4-ம் தேதி வரை 3 நாட்கள் நடைபெறும் இம்மாநாட்டில் உலகம் முழுவதும் ஏராளமான தொழில்நுட்பவியலாளர்கள், ஆராயச்சியாளர்கள், தொழிலதிபர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
இநத் செமிகான் இந்தியா 2025 மாநாட்டை பிரதமர் மோடி துவக்கி வைத்தார். இதைத்தொடர்ந்து, இந்தியாவின் முதல் முழுமையாக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 32-பிட் நுண்செயலியான 32 பிட்விக்ரம் சிப் மற்றும் பிற சோதனை சில்லுகளை மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வழங்கை அதை பிரதமர் மோடி அறிமுகப்படுத்தினார்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசும்போது, நான் ஜப்பான் மற்றும் சீனாவுக்கு சென்றுவிட்டு நேற்று இரவு தான் திரும்பி வந்தேன் என்றவர், நாம் அடுத்த தலைமுறை சீர்திருத்தங்களை விரைவில் தொடங்குவோம் என்றனர்.
டிஜிட்டல் உள்கட்டமைப்பின் அடிப்படை முக்கியமான கனிமங்கள் ஆகும். இந்தியா அரிய கனிமங்களுக்கான தேவையை பூர்த்தி செய்ய உறுதிபூண்டுள்ளது என்றவர். முதல் முழுமையாக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 32-பிட் நுண்செயலியான விக்ரம் அறிமுகப்படுத்தியதை சுட்டிக்காட்டி, நாட்டின் குறைக்கடத்தி பயணத்தில் இருது ஒரு திருப்புமுனையாக என பாராட்டினார்,

இந்தியா “பின்தளத்தில் இருந்து முழு அடுக்கு குறைக்கடத்தி நாடாக” மாறுகிறது என்றவர், “இப்போது எதுவும் நம்மைத் தடுக்க முடியாது” என்று அறிவித்தார். மேலும், “இந்த ஆண்டு இறுதிக்குள், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் சிப் சந்தைக்கு வரும்,” என்றும் கூறினார்.
“இந்தியாவின் மிகச்சிறிய சிப் உலகின் மிகப்பெரிய மாற்றத்தை இயக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை. நிச்சயமாக எங்கள் பயணம் தாமதமாகத் தொடங்கியது, ஆனால் இப்போது எதுவும் நம்மைத் தடுக்க முடியாது” என்று மோடி பிரதிநிதிகளிடம் கூறினார்.
சிஜி பவரின் பைலட் ஆலை ஆகஸ்ட் 28 அன்று செயல்படத் தொடங்கியது, அதைத் தொடர்ந்து கெய்ன்ஸ் விரைவில் வர உள்ளது, அதே நேரத்தில் மைக்ரான் மற்றும் டாடா ஏற்கனவே சோதனை சில்லுகளை உற்பத்தி செய்யத் தொடங்கியுள்ளன என்று அவர் குறிப்பிட்டார். வணிக ரீதியான சிப் உற்பத்தி இந்த ஆண்டு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, என்று அவர் மேலும் கூறினார்.
இந்தியாவின் குறைக்கடத்தி நோக்கம் ஒற்றை வடிவமைப்பு அல்லது திட்டத்திற்கு அப்பாற்பட்டது என்றும், அதற்கு பதிலாக வடிவமைப்பு, உற்பத்தி, பேக்கேஜிங் மற்றும் மேம்பட்ட சாதனங்களை உள்ளடக்கிய ஒரு முழுமையான சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும் மோடி வலியுறுத்தினார்.
“இந்தியாவை தன்னிறைவு மற்றும் உலகளவில் போட்டித்தன்மை கொண்டதாக மாற்றும் ஒரு குறைக்கடத்தி சுற்றுச்சூழல் அமைப்பை நாங்கள் உருவாக்குகிறோம்,” என்று அவர் கூறினார்.
சிப் சிறியதாக இருக்கலாம். ஆனால் உலகின் முன்னேற்றத்துக்கு தேவையான சக்தியை அது கொண்டுள்ளது. கடந்த நூற்றாண்டை எண்ணெய் தீர்மானித்தது. அடுத்துவரும் நூற்றாண்டை சிப் தீர்மானிக்கப்போகிறது. எண்ணெய் கருப்பு தங்கம் என அழைக்கப்படுகிறது. அதே நேரம் இந்த சிப்கள் டிஜிட்டல் வைரங்கள் என அழைக்கப்படும். சீர் திருத்தம், செயல்திறன் மற்றும் மாற்றம் என்ற மந்திரத்தை இந்தியா பின்பற்றி வருகிறது.
செமிகண்டக்டர் திட்டங்களில் 18 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு செய்யப்பட்டுள்ளது. உலகம் இந்தியாவை நம்புகிறது. கடுமையான சவால்கள் இருந்த போதிலும் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.8 சதவீதம் வளர்ச்சி அடைந்து உள்ளது. 2023ம் ஆண்டில் இந்தியாவின் முதல் செமிகண்டக்டர் உற்பத்தி ஆலைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது. இந்த துறையில் இந்தியாவின் வளர்ச்சியை உலகம் உன்னிப்பாக கவனிக்கிறது.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
இந்த மாநாட்டில் அமெரிக்கா, நெதர்லாந்து, ஜப்பான் சிங்கப்பூர், தென்கொரியா, மலேஷியா ஆகிய 6 நாடுகளுடன் வட்டமேசை சந்திப்புகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மேலும் 33 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றனர். மேலும், 350 கண்காட்சியாளர்கள் இம்மாநாட்டில் அரங்குகளை வைக்கவுள்ளனர். 1,100 அரங்குகள் அமைக்கப்பட்டு உள்ளன. ஐ.பி.எம்., மைக்ரான், டாடா எலக்ட்ரானிக்ஸ், டோக்கியோ எலக்ட்ரான் உள்ளிட்ட நிறுவனங்கள் இதில் பங்கேற்றன.