நடிகர் சின்னி ஜெயந்தின் மகன் ஸ்ருதன் ஜெய் நாராயணன் தூத்துக்குடி மாவட்ட சப் கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார்.

1980 மற்றும் 1990-களில் நகைச்சுவை, குணச்சித்திரம், வில்லத்தனம் என கலவையான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வந்தவர் சின்னி ஜெயந்த். தற்போது விஜய் சேதுபதின் ‘யாதும் ஊரே யாவரும் கேளீர்’ படத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் சின்னி ஜெயந்தின் மகன் ஸ்ருதன் ஜெய் நாராயணன் கடந்த 2019-ம் ஆண்டு நடந்த ஐஏஎஸ் தேர்வில் இந்திய அளவில், 75-வது ரேங்க் பெற்றார். தற்போது அவர் உதவி மாவட்ட ஆட்சியர் பயிற்சியில் நியமிக்கப்பட்டுள்ளார்.