சக்ரி டோலட்டி இயக்கத்தில் நயன்தாரா, பிரதாப் போத்தன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கொலையுதிர் காலம்’. இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் மார்ச் 23 நடைபெற்றது.

இவ்விழாவில் நயன்தாரா குறித்து ராதாரவி பார்த்தவுடன் கும்பிடத் தோன்றுபவர்களும் நடிக்கலாம், பார்த்தவுடன் கூப்பிடத் தோன்றுபவர்களும் நடிக்கலாம்”. என கூறி பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். இந்த வீடியோ பதிவு ட்விட்டரில் பகிரப்பட்டது. அதனைப் பார்த்து பலரும் ராதாரவியை கடுமையாக சாடி வருகிறார்கள். .

இந்நிலையில் சின்மயி தனது ட்விட்டர் பக்கத்தில் ; ‘தயாரிப்பாளர் சங்கமும், நடிகர் சங்கமும் என் பிரச்சினையில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை .ஆனால், இந்த முறை அந்த நபர் மிகவும் வெற்றிகரமாக தன்னை நிரூபித்த நடிகையையல்லவா மேடையில் சீண்டியுள்ளார்.

இப்போதாவது நடவடிக்கை எடுங்கள், அப்படி எடுத்தால் ரொம்ப நன்றி. நேற்றிலிருந்து நடிகர்கள் யாரேனும் வாய் திறந்து கண்டனத்தை தெரிவிப்பார்கள் என காத்துக் கொண்டிருக்கிறேன். அந்த வீடியோவில் ராதாரவி அந்த நடிகையின் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் நடிகையை மிகவும் தரக் குறைவாகப் பேசுகிறார். ஒருவரும் ஒரு வார்த்தைகூட கண்டனம் தெரிவிக்கவில்லை.அப்புறம் கூப்பிடுறவுங்க கூப்பிடுவாங்கன்னு சொல்றாரே ராதாரவி, அந்த கூப்பிடுற ஆம்பளைங்க யாரு? அவங்கள தானே அசிங்கப் படுத்தணும்?”. என பதிவிட்டுள்ளார்.