வில்லங்கமான முத்த போட்டி.. மரச்சாமான் கம்பெனி அக்கப்போர்
உலகம் முழுவதும் இன்று முடங்கிக் கிடக்க, சீனாக்காரர்கள் தான் காரணம் என்று சின்ன குழந்தைக்கும் தெரியும்.
கொரோனாவுக்கு 4 ஆயிரத்து 600க்கும் மேற்பட்டோரைக் காவு கொடுத்துள்ள அந்த தேசம், கொஞ்ச நாட்களாகத்தான் மீண்டு வருகிறது.
படிப்படியாக ஆலைகள் மற்றும் கடைகளைத் திறக்க அனுமதி அளித்துள்ளது, அரசாங்கம்.
அப்படி மீண்டும் திறக்கப்பட்ட ஆலைகளில் ஒன்று-
சுசோவ் நகரில் உள்ள ‘ஜியாங்சு’ என்ற மரச்சாமான்கள் உற்பத்தி ஆலை.
ஊழியர்களிடையே ஏதாவது ஒரு போட்டி நடத்தி உற்சாகமூட்டி, வேலையை ஆரம்பிக்கலாம் என நினைத்தார், ஆலை முதலாளி.
என்ன போட்டி தெரியுமா?
முத்தப்போட்டி.
நடுவில் கண்ணாடி வைக்கப்பட்டிருக்கும்.
அந்த பக்கம் பெண்களும், இந்த பக்கம் ஆண்களும் நின்று கொண்டு, ஒருவருக்கொருவர் முத்தம் கொடுக்க வேண்டும்.
‘நன்றாக’ முத்தம் கொடுக்கும் ஜோடிக்குப் பரிசு உண்டு.
இந்த ஜோடிகள் தம்பதியர் அல்ல.
மாதக்கணக்கில் முடமாகிக் கிடந்த சீனா, நொண்டி அடித்தாவது மீண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில்-
இந்த முத்த போட்டி தொடர்பான வீடியோ காட்சிகள், அங்குள்ள சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.
போட்டியை நடத்திய ஆலையைத் திட்டி தீர்த்து வருகிறார்கள், நெட்டிசன்கள்.
திட்டப் பயன்படுத்தப்படும் வார்த்தைகள்-’ஏ’ கிரேடு ரகம்.
– ஏழுமலை வெங்கடேசன்