சீன ராணுவம் இந்தியாவுக்குள் 12 கி.மீ. ஊடுருவலா?

Must read

இட்டாநகர்: இந்த ஆண்டு ஜூலை-ஆகஸ்ட் மாதங்களில் சீன துருப்புக்கள் அருணாச்சல பிரதேசத்தில் இந்திய எல்லைக்குள் 12 கி.மீ ஊடுருவியுள்ளனர் என்ற இந்த திடுக்கிடும் தகவலை பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் தபீர் காவ் வெளியிட்டுள்ளார்.

காவோவின் கூற்றுப்படி, மாநிலத்தின் திபாங் பள்ளத்தாக்கு மாவட்டத்தின் அன்ரெல்லா பள்ளத்தாக்கில் அண்டை நாட்டைச் சேர்ந்த வீரர்கள் இந்தியப் பக்கத்தில் குறைந்தது 12 கி.மீ கடந்து வந்துள்ளனர்.

அப்பகுதியிலிருந்து படங்களும் வீடியோக்களும் இப்போது வெளிவந்துள்ளன, அவை அத்துமீறல் எனக் கூறப்படுகின்றன. இந்த சம்பவம் ஜூலை-ஆகஸ்ட் மாதங்களில் நிகழ்ந்ததாக நம்பப்படுகிறது. மாவட்டத்தின் கடைசி நிர்வாக வட்டமான மிப்பியின் வடகிழக்கு பக்கத்தில் ஆண்ட்ரெல்லா பள்ளத்தாக்கு வருகிறது.

காவோவைத் தொடர்பு கொண்டபோது, “இந்திய இராணுவம் தங்கள் கோடைக்கால முகாமை ஒரு வழக்கமான ரோந்து காலத்தில் கட்டியெழுப்ப வேண்டியிருந்த வேளையில்  அவர்களின் அடிப்படை முகாமுக்குத் திரும்ப வேண்டியிருந்தது என்பது மிகவும் அவமானகரமானதாகவும் கவலை தருவதாகவுமானது  என்று காவ் தெரிவித்துள்ளார்.

”முறையான எல்லை வகுக்கப்படாதவரை இது போன்றவைகளை அடிக்கடி நாம் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்” என்று அவர் மேலும் கூறினார்.

செப்டம்பர் மாதம், அருணாச்சலில் அஞ்சாவ் மாவட்டத்தின் சாக்லகம் வட்டத்தில் சீன இராணுவம் தியுமிரோ நலா மீது மரப்பாலம் கட்டியதாக இதேபோன்ற கூற்றுக்கு காவ் தலைப்புச் செய்திகளை வெளியிட்டார்.

அரசாங்க தரவுகளின்படி, சீன இராணுவம் 2016 மற்றும் 2018 க்கு இடையில் 1,025 முறை இந்திய எல்லைக்குள் நுழைந்தது.

2016 ல் சீன இராணுவம் அத்துமீறல்களின் எண்ணிக்கை 273 ஆக இருந்தது, இது 2017 ல் 426 ஆக உயர்ந்தது. 2018 ல் இதுபோன்ற வழக்குகளின் எண்ணிக்கை 326 ஆக இருந்தது, மத்திய பாதுகாப்பு மந்திரி ஸ்ரீபாத் நாயக் நவம்பர் 27 அன்று மக்களவைக்கு வழங்கிய விவரங்களின்படியானதாகும்

More articles

Latest article