எச் ஐ வி எனும் உயிர் கொல்லி நோய் உலகம் முழுதும் 3.69 கோடி பேர்களையும் இந்தியாவில் 20 லட்சத்துக்கும்  மேல் எச்ஐவி எனும் எய்ட்ஸ் கிருமியால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இன்று வரை அவர்களுக்கு முழுமையான தீர்வு காணப்படவில்லை .

இந்நிலையில் சீன விஞ்ஞானிககள் உருவாக்கியுள்ள தடுப்பூசி ஒன்று தீர்வை நோக்கி பயணித்து வருவதாக ஆய்வு முடிவுகள் தெரிவித்துள்ளன.

உறுதியான ஆய்வு முடிவுகளின் படி சீன விஞ்ஞானிகள் எச்ஐவி நோய் தடுப்பூசியை 160 தன்னார் வளர்களுக்கு செலுத்தியுள்ளதாகவும், இந்த தடுப்பூசி எச்ஐவி நோய்தொற்றை கட்டுக்குள் வைத்திருப்பதாக தெரிவித்துள்ளனர். பெரும்பாலான எச்ஐவி மருத்துவ ஆய்வுகள் முதல் கட்டத்தினையே தாண்டாத சூழ்நிலையில் சீன விஞ்ஞானிகளின் ஆய்வு இரண்டாம் கட்டத்தினை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது

தடுப்பூசி நோயாளிகளுக்கு செலுத்தும்போது DNA செல்கள் தன்னைத்தானே புதுப்பித்துக்கொள்ள வும் முயற்சிக்கும்,  அதன் மூலம் உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தை தூண்டி, எச்ஐவி கிருமி களை எதிர்த்துப் போராட மேலும் மேலும் DNA செல்கள் உருவாக்கும். எச். ஐ. வி. யின் டி. என். ஏ. பரிசோதனை செய்யும் முதல் தடுப்பூசிகளில் இதுவும் ஒன்று.

2007 ல் முதல் கட்ட  பரிசோதனை செய்யப்பட்து, இப்போது இந்த இரண்டாம் கட்டத்திற்கு செல்லவுள்ளது. இதே போல்  University of Nebraska Medical Centre பல்கலைக்கழகமும் எச்ஐவியை முழுமையாக குணமாக்கமுடியும் என்று தெரிவித்துள்ளது.

-செல்வமுரளி