பீஜிங்: சீனாவில் மக்கள் தொகையை அதிகரிக்கும் வகையில், திருமணம் செய்து கொள்பவர்களுக்கு 30 நாள் சம்பளத்துடன் கூடிய விடுமுறையை சீன அரசு அறிவித்து உள்ளது.
உலக மக்கள் தொகையில் முதலிடத்தில் உள்ள சீனா, கொரோனா தொற்றால் ஏராளமானோரை இழந்துள்ளது. ஆனால், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மக்கள் தொகையை கட்டுப்படுத்த முடிவு செய்து பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டது. உலகிலேயே அதிக மக்கள்தொகை கொண்டிருந்த சீனாவில், 1980 மற்றும் 2015 க்கு இடையில், மக்கள் ஒரு குழந்தை மட்டுமே பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற கொள்கையை அமல்படுத்திய பிறகு சீனாவின் மக்கள் தொகை கணிசமாக குறைந்துள்ளது. 2022 ஆம் ஆண்டில், சீனாவில் மிகவும் குறைந்த பிறப்பு விகிதத்தைக் கொண்டுள்ளது.
இதனால், தற்போதுள்ள இளம் தம்பதியினர் ஒன்று அல்லது இரண்டு குழந்தைகளை மட்டுமே பெற்று வளர்த்து வருகின்றனர். இதனால், அங்கு மக்கள் தொகை குறைந்த வருவதால், மீண்டும் மக்களை தொகையை பெருக்க புதுமணத் தம்பதிகளுக்கு 30 நாட்கள் ஊதியத்துடன் கூடிய திருமண விடுமுறையை சீன மாகாணங்கள் அறவித்துள்ளன.
சீனாவில் குறைந்துவரும் மக்கள்தொகை, அந்நாட்டின் பொருளாதாரத்தையும் பாதிக்கிறது. இதையடுத்து, குறைந்து வரும் பிறப்பு விகிதத்தை சமாளிப்பதற்கான வழிகளைத் தேடும் சீனா, இந்த முன்னெடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அதன்படி, தனது வழக்கமான குறைந்தபட்ச ஊதியத்துடன் மூன்று நாட்கள் திருமண விடுப்புகள் கொடுக்கும் வழக்கத்தில் இருந்து விலகி, இப்போது இளம் புதுமணத் தம்பதிகளுக்கு 30 நாட்கள் ஊதியத்துடன் கூடிய திருமண விடுமுறையை வழங்குகிறது அங்கிருந்து வெளிவரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இளம் தம்பதிகள் திருமணம் செய்து குழந்தைகளைப் பெற்றுக் கொள்வதை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் இந்த மாபெரும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என சீன மாகாணங்கள் தெரிவித்து உள்ளன. புதுமணத் தம்பதிகளுக்கு இந்த உரிமை மற்றும் சலுகைகள் ஒரு மாத கால விடுப்பு என்பது, சீனாவின் குறைந்து வரும் பிறப்பு விகிதத்தை அதிகரிக்க வழிவகுக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளது.
சீனாவின் சில மாகாணங்கள் புதுமணத் தம்பதிகளுக்கு 30 நாட்கள் திருமண விடுமுறை வழங்கினாலும், சில மாகாணங்கள் 10 நாட்கள் மட்டுமே விடுமுறை அளிப்பதாக தெரிவித்துள்ளதாகவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன. கன்சு மற்றும் ஷாங்க்சி மாகாணங்கள் 30 நாட்கள் விடுமுறை வழங்குவதாகவும், ஷாங்காய் 10 நாட்கள் விடுமுறையை வழங்குகிறது என ராய்ட்டர்ஸ் எசெய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
இருந்தாலும் சீன இளைஞர்களிடையே திருமணம் மற்றும் குடும்பம் குறித்த அணுகுமுறை மாறுதல், பாலின சமத்துவமின்மை மற்றும் குழந்தைகளை வளர்ப்பதில் பொருளாதார சவால்கள் போன்றவை பிறப்பை கட்டுப்படுத்தி உள்ளன என்பதே உண்மை நிலவரமாக உள்ளது.