சென்னை:
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையில் சீன அதிபர் ஜிஜின்பிங் சென்னை வந்தடைந்தார். அவருக்கு தமிழகத்தின் பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
மாமல்லபுரத்த்தில் நடைபெற உள்ள 2நாள் முறைசாரா மாநாட்டில் கலந்துகொள்ள தமிழகம் வந்துள்ள சீன அதிபருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெயசங்கர் உள்பட மூத்த மத்தியஅரசு அதிகாரிகள் வரவேற்றதைத் தொடர்ந்து, தமிழக கவர்னர் பன்வாரிலால், முதல்வர் எடப்பாடி பழனிச் சாமி, துணைமுதல்வர் ஓபிஎஸ், சபாநாயகர் தனபால் மற்றும் தலைமைச் செயலாளர், டிஜிபி உள்பட உயர் அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
அதைத்தொடர்ந்து, அங்கு நடைபெற்ற தமிழகத்தின் பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளான மயிலாட்டம், ஒயிலாட்டம், பரத நாட்டியம் உள்பட பல்வேறு கலைநிகழ்சிகள் மூலம் வரவேற்பு அளிக்கப்பட்டது. அதை ஏற்றுக்கொண்ட சீன அதிபர் கையசைத்து நன்றி தெரிவித்தார்.
அதைத்தொடர்ந்து காரில் ஏறி கிண்டியில் உள்ள ஓட்டலுக்கு புறப்பட்டடார்.
முன்னதாக சரியாக மதியம் 1.50 மணிக்கு சீன் அதிபரின் விமானம், சென்னை விமான நிலையத்தில் தரையிறக்கப் பட்டது. சுமார் 10 நிமிடத்துக்கும் மேலாக விமான கதவு திறக்கப்படாமல் இருந்தது. பின்னர் சரியாக 2.10 மணி அளவில் அவர் விமானத்தில் இருந்து கீழே இறங்கினார்.