சென்னை:

சீன அதிபர் ஜின்பிங் நாளை சென்னைக்கு வர உள்ளதால், கடுமையான பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. இதன் காரணமாக, விசாரணைக்கு கைதிகளை வாகனங்களில் அழைத்து வருவதில் சிக்கல் உள்ளதாகவும், அதனால், 10ந்தேதி முதல் 12ந்தேதி வரை வீடியோ கான்பரன்சிங் மூலம் விசாரணை நடத்த காவல்துறை ஆணையர், பிரின்சிபல் செஷன் நீதிமன்றத்துக்கு கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அவர் எழுதியுள்ள கடிதத்தில், நாளை பிரதமர் மோடி, சீன அதிபர் சந்திப்பு நடைபெற உள்ளதால், காவல்துறையினர் பாதுகாப்பு பணிகளுக்காக அனுப்பப்பட்டு உள்ளனர். அதனால், குற்றவழக்கு விசாரணைக்கு, கைதிகளை புழல் மற்றும் சிறைகளில் அழைத்து வருவதில் சிக்கல் உள்ளதால், 10ந்தேதி முதல் 12ந்தேதி வீடியோ கான்பரன்சிங் மூலம் விசாரணை நடத்துமாறு கூறியுள்ளார்.

se