உலகின் வளர்ந்த மற்றும் வளரும் ஜி-20 நாடுகளின் கூட்டம் டெல்லியில் செப்டம்பர் 9 மற்றும் 10 ம் தேதிகளில் நடைபெற உள்ளது.
இந்த ஆண்டு இந்த கூட்டமைப்பின் தலைமை பொறுப்பை ஏற்றிருக்கும் இந்தியா இந்த கூட்டத்தை நடத்துகிறது.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்ளிட்ட உலகின் முக்கிய தலைவர்கள் வருவதையொட்டி தலைநகர் டெல்லியை தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ள மத்திய அரசு உலக தலைவர்களின் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்துக் காரணங்களுக்காக டெல்லியில் பொதுவிடுமுறை அறிவித்துள்ளது.
ஜி-20 மாநாட்டில் கலந்து கொள்ளப்போவதில்லை என்று ரஷ்ய அதிபர் புடின் ஏற்கனவே தெரிவித்துள்ளார். இந்த நிலையில் சீன அதிபர் ஷி ஜின்பிங்-கும் இந்த மாநாட்டில் கலந்து கொள்ளமாட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் ஜி-20 மாநாட்டை சீன அதிபர் புறக்கணிக்கப்போவதாக வெளியாகியுள்ள செய்தி இந்திய அதிகாரிகளிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.