இஸ்லாமாபாத்,:
பாகிஸ்தானில் சீனர்களுக்கு எதிராக பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என சீன தூதரகம் எச்சரித்துள்ளது.

பாகிஸ்தானில் சாலை பணிகளுக்கு வழங்கி வந்த உதவியை சீனா தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. இந்நிலையில் சீன அரசு சார்பில் பாகிஸ்தானில் வாழும் சீனர்களுக்கு வழக்கத்தில் இல்லாத வகையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் சீனர்கள் மற்றும் சீன நிறுவனங்களுக்கு எதிராக தாக்குதலை நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளனர் என சீன தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. எந்தஒரு முழு தகவலையும் தெரிவிக்காத இஸ்லாமாபாத்தில் உள்ள சீன தூதரகம், சீனர்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டும். எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். வெளியே செல்வதையும், கூட்டம் நிறைந்த பகுதிக்கு செல்வதையும் சீனர்கள் தவிர்க்க வேண்டும் என கேட்டுக் கொண்டு உள்ளது.
பாகிஸ்தான் போலீஸ் மற்றும் ராணுவத்துடன் தொடர்பில் இருக்க வேண்டும். உதவி ஏதேனும் தேவை என்றால் உடனடியாக தூதரகத்தை தொடர்பு கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
[youtube-feed feed=1]