சீனா, அவசரகால பயன்பாட்டு அங்கீகாரத்தின் கீழ் ஜூலை 22 முதல், தனது மக்களுக்கு தடுப்பு மருந்துகளை ஏற்கனவே வழங்க தொடங்கிவிட்டதாக சீன மூத்த சுகாதார அதிகாரி ஒருவர் அரசு தொலைக்காட்சியில் தெரிவித்தார்.

ஏற்கனவே, அனைத்து முக்கிய சோதனைகளையும்  கட்டாய சோதனைகளையும் முடிக்காமல் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்துக்கு ஒப்புதல் அளித்த விவகாரத்தில் ரஷ்யா விமர்சனங்களை எதிர்கொண்டுள்ள நிலையில், சீனா நாடானது ஏற்கனவே தனது மக்களுக்கு தடுப்பு மருந்து வழங்க தொடங்கியுள்ளது என்பது தற்போது சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. இந்த தடுப்பு மருந்து, அரசுக்கு சொந்தமான சினோபார்ம் நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது ஐக்கிய அரபு எமிரேட்ஸில் மூன்றாம் கட்ட சோதனையில் உள்ளது. ஆனால் சீன சுகாதார அதிகாரி ஒருவர் அரசு தொலைக்காட்சியில் ஜூலை 22 முதல் அவசரகால பயன்பாட்டு அங்கீகாரத்தின் கீழ் மக்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டு வருவதை வெளிப்படுத்தினார்.

தி வாஷிங்டன் போஸ்ட்டில் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில், சீனாவின் கொரோனா வைரஸ் தடுப்பூசி மேம்பாட்டு திட்டத்தின் தலைவரான ஜெங் சோங்வே, ஜூலை 22 முதல் மருத்துவ ஊழியர்கள் மற்றும் சில அரசு ஊழியர்களுக்கு இந்த தடுப்பூசி வழங்கப்படுவதாக அரசு தொலைக்காட்சியில் ஒப்புக் கொண்டார். மேலும் வரும் மாதங்களில் இது இன்னும் பலருக்கு வழங்கப்பட வாய்ப்புள்ளது என்றும் கூறினார். “இலையுதிர்காலம் மற்றும் குளிர்காலத்தில் நோய் பரவுவதைத் தடுப்பதற்காக, இந்த திட்டத்தில் ஒரு மிதமான விரிவாக்கத்தை நாங்கள் பரிசீலித்து வருகிறோம். இதன் நோக்கம் மக்கள்தொகையில் உள்ள சிறப்புக் குழுக்களிடையே முதலில் ஒரு நோய்தடுப்பை உருவாக்குதல் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குவதாகும்” என்று ஜெங் கூறியதாகக் கூறப்படுகிறது.

இந்த தடுப்பு மருந்து, சீனாவின் இராணுவத்தின் வீரர்களுக்கு மட்டுமே என அளிக்கப்பட்ட மருந்திலிருந்து வேறுபட்டது. அந்த தடுப்பு மருந்து, இராணுவ மருத்துவ அறிவியல் அகாடமியுடன் இணைந்து கேன்சினோ பயோலாஜிக்ஸ் உருவாக்கப்பட்டது, ஜூன் கடைசி வாரத்தில் வரையறுக்கப்பட்ட பயன்பாட்டிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. ஏற்கனவே அந்தத் தடுப்பு மருந்து செலுத்தப்பட்ட நபர்களின் எண்ணிக்கை குறித்து எந்த தகவலும் இல்லை. எனவே, சினோபார்ம் தடுப்பூசி, பொது மக்களில் பயன்படுத்த அங்கீகரிக்கப்பட்ட முதல் தடுப்பு மருந்து ஆகும்.

நவம்பர் 3 ம் தேதி ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் தனது கொரோனா வைரஸ் தடுப்பு மருந்துக்கான அவசரகால பயன்பாட்டு அங்கீகாரம் குறித்து அமெரிக்க அரசாங்கத்துடன் எந்தப் பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை என்று பார்மா நிறுவனமான அஸ்ட்ராஜெனிகா தெரிவித்துள்ளது. ஆஸ்ட்ராஜெனிகா தடுப்பு மருந்துக்கு அவசரகால பயன்பாட்டு அங்கீகாரத்தை வழங்க, தேர்தல்களுக்கு முன்னதாக ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ளது.

“அதற்கான  சாத்தியத்தை ஊகிப்பது முன்கூட்டியதாக இருக்கும்” என்று மருந்து தயாரிப்பு நிறுவனம் ஒரு அறிக்கையில் கோரியுள்ளது. சனிக்கிழமையன்று, அமெரிக்காவின் மருந்துகள் மற்றும் உணவு பொருள்  கட்டுப்பாட்டாளர் நிர்வாகம் தான் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படவுள்ள  வாய்ப்புகளைக் கெடுப்பதற்காகவே வைரஸ் தடுப்பு மருந்து சார்ந்த கோப்புகளைக் கிடப்பில் போட்டதாக டிரம்ப் குற்றம் சாட்டியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பும், தேர்தலுக்கு முன்னர் ஒரு செயலுள்ள தடுப்பு மருந்து மிகவும் சாத்தியமே எனக் கூறியிருந்ததும் குறிப்பிடத் தக்கது.