பீஜிங்
சீனாவில் வர்த்தகம் மிகவும் பின்னடைந்துள்ளதால் சீன அரசு வரிகளை குறைக்க திட்டமிட்டுள்ளது.
கடந்த சில நாட்களாகவே உலகெங்கும் வர்த்தகம் பெரும் பின்னடைவு அடைந்துள்ளது. அதிலும் குறிப்பாக சீனா மற்றும் அமெரிக்காவின் வர்த்தகப் போரினால் சீன வர்த்தகம் பெரிதும் பாதிப்பு அடைந்துள்ளது. சீனப் பொருட்களுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் கடுமையாக வரி விதித்தார். அதை ஒட்டி சீனாவும் அமெரிக்க பொருட்களுக்கு வரியை கடுமையாக உயர்த்தியது.
சீன வர்த்தகத்தில் அமெரிக்காவும் அமெரிக்க வர்த்தகத்தில் சீனாவும் முக்கிய பங்கு வகிக்கின்றன. இதனால் சீனாவில் வர்த்தகத்தில் கடும் பின்னடிவு ஏற்ப்பட்டுளது. இதை சமாளிக்க இரு நாடுகளும் நடத்திய பேச்சு வார்த்தையில் சில நாட்களுக்கு வரி விதிப்பு ஒத்தி வைக்க உடன்பாடு காணப்பட்டது. ஆயினும் புதிய வரிகளுக்கு மட்டுமே அந்த ஒத்திவைப்பு என இரு நாடுகளும் தெரிவித்துள்ளது.
இதனால் ஏற்கனவே உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் சீனாவில் ஏராளமாக தங்கி உள்ளன. ஆகவே அந்த பொருட்களுக்கு வரி குறைப்பு செய்ய சீன அரசு ஆலோசித்து வருவதாக தகவல்கள் கூறப்படுகின்றன. தற்போது சீனப் பொருளாதாரம் மிகவும் நலிந்துள்ளது. எனவே சீன அரசுக்கு வர்த்தக முன்னேற்றம் இன்றியமையதாத உள்ளது.
சீனப் பொருட்கள் மிகவும் மலிவான விலையில் விற்கப்படுகின்றன. மேலும் சீனா தனது பொருட்கள் மீதான வரியை குறைக்க உள்ளதால் மேலும் விலை சரிவு ஏற்படும் எனவும் இதனால் வர்த்தகம் முன்னேற வாய்ப்புள்ளது எனவும் சீன பொருளாதார வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். ஆயினும் அமெரிக்காவின் பிடிவாதம் தளர்ந்தால் மட்டுமே சீனப் பொருட்களின் விலை அமெரிக்காவில் மலியும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.