கடந்த வருடம் சீன வி்ஞ்ஞானி ஒருவர் மரபணு மாற்றம் செய்யப்பட்ட குழந்தையை உருவாக்கியதாக அறிவித்திருந்தார். அப்போதே உலகமெங்கும் அவருக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் சீனாவில் உயர்மட்ட சட்டக்குழு மனித மரபணு சார்ந்து ஆய்வுகளுக்கு கடுமையான சட்டவிதிகளை உருவாக்க உள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.
He Jiankui, எனும் இணைபுப் பேராசிரியர் , ஷென்ஷெனில் அமைந்துள்ள Southern University of Science and Technology பல்கலைக்கழகத்தில் பணியாற்றிவருகிறார், அவர் கடந்த வருடம் CRISPR-Cas9 எனும் மரபணு மாற்ற தொழில்நுட்பத்தினை பயன்படுத்தி மரபணுவை திருத்தி இரட்டை பெண் குழந்தைகளை உருவாக்கியதாக அறிவித்தபோது அவருக்கு உலகமெங்கும் கண்டனங்கள் கிளம்பியது.
அதன்பின்னர் He Jiankui, ஆய்வு குறித்த விசாரணை நடத்தப்பட்டது. முன்னதாக He Jiankui மரபணுமாற்றம் செய்து பெறப்பட்ட பெண் குழந்தைகளுக்கு எச்ஐவி வரைஸ் தொற்றில் இருந்து பாதுகாப்பு கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்
சீனாவின் சட்டமன்றத்திற்கு அனுப்பப்பட்ட வரைவு சட்டங்களின் கீழ், மருத்துவ மற்றும் மனித பரிசோதனைகள்,மரபணுமாற்ற பரிசோதனைகள், மனித இனங்களை சரியான முறையில் உறுதிப்படுத்துவது போன்றவற்றில் அரசாங்கம் நெருக்கமான கண்காணிப்பையும் கடுமையான விதிகளையும் கொண்டு உள்ளது என்று அரசாங்க செய்தி ஊடகம் Xinhua தகவல் கொடுத்துள்ளது.
மனிதக் மரபணுக்களையும், கருக்களையும் மரபணு மூலம் திருத்துவதற்கான எந்த ஒரு விண்ணப்பமும் சீனாவின் சட்ட மற்றும் மருத்துவ அறநெறிகளுக்கு எதிரானவை என்று சீின அதிகாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
-செல்வமுரளி