பெய்ஜிங்: கடந்த கால வரலாற்றை உணர்ந்து, சீனாவிடமிருந்து இந்தியா பாடம் கற்று கொள்ள வேண்டும் என சீனா மிரட்டல் தொணியில் கருத்து தெரிவித்துள்ளது.
வடகிழக்கு மாநிலமான சிக்கிம் மாநிலத்தில் சீனா- இந்தியா-பூட்டான் எல்லையில் உள்ளது டோக்லாம் பகுதி. இந்தியாவுக்குச் சொந்தமான இந்த பகுதியில் சீன ராணுவம் அத்துமீறி நுழைவதை வழக்கமகக் கொண்டிருக்கிறது. சில நாட்களுக்கு முன் சீன- இந்திய ராணுவ வீரர்களிடையே கைகலப்பு ஏற்பட்டது. பூட்டான் நாட்டிற்குள்ளும் சீன ராணுவம் அத்துமீறி நுழைவதை வழக்கமாக வைத்திருக்கிறது. .
இந்நிலையில் சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் லூ காங்க், செய்தியாளர்களிடம் பேசினார் அப்போது, ‛‛ சீன எல்லையில் இருந்து இந்தியா, படைகளை விலக்கி கொள்ள வேண்டும். கடந்த 1962 ம் ஆண்டு இந்திய-சீன போரில் இந்தியா தோற்றுப்போன வரலாறு அவர்களுக்கு தெரியும். இந்திய-சீன எல்லை பிரச்னை இன்று வரை தீரக்கப்படவில்லை. ஆகவே கடந்த கால வரலாற்றை நினைத்து சீனாவிடம் இருந்து இந்தியா பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்” என்று அவர் மிரட்டல் தொணியில் கருத்து தெரிவித்தார்.