இடாநகர்: இந்தியா சீனா எல்லை பகுதி மாநிலமான அருணாச்சல பிரதேசத்தின் 30 இடங்களின் பெயரை சீன அரசு மாற்றி அறிவித்துள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், சீனாவுக்கு மத்தியஅரசு கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சீனாவுக்கு கண்டனம் தெரிவித்துள்ள மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், “இன்று நான் உங்கள் வீட்டின் பெயரை மாற்றினால், அது என்னுடையதாகிவிடுமா?” எஸ் ஜெய்சங்கர், அருணாச்சல பிரதேசம் இந்தியாவின் ஒரு மாநிலமாக உள்ளது, அது என்றுமே இருக்கும் என்றும் என்றும் கூறியுள்ளார்.
இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசம் மீது சீனா தொடர்ந்து உரிமை கொண்டாடி வருகிறது. அருணாச்சல பிரதேசத்தில் உள்ள 30 இடங்களுக்கு சீனா தனது மொழியில் புதிய பெயர்களை வைத்து பட்டியலை வெளியிட்டு உள்ளது. சீன சிவில் விவகார அமைச்சகம், அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள இடங்களை ஏற்கனவே மறுப்பெயரிட்டு 3 பட்டியல்களை வெளியிட்ட நிலையில், தற்போது 4வது முறையாக பட்டியலை வெளியிட்டு உள்ளது.
அதாவது, கடந்த 2017ஆம் ஆண்டு அருணாச்சல பிரதேசத்தில் உள்ள ஆறு இடங்களின் பெயர்களை மாற்றி முதல் பட்டியலையும், 2021 ஆம் ஆண்டு 15 இடங்களின் பெயர்களை மாற்றி இரண்டாவது பட்டியலையும், 2023 ஆம் அண்டு 11 இடங்களுக்கான பெயர்களை மாற்றி மூன்றாவது பட்டியலை வெளியிட்ட சீனா தற்போது 30 இடங்களில் பெயர்களை மாற்றி நான்காவது பட்டியலை சீன சிவில் விவகார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, சீனாவால் மறுபெயரிடப்பட்ட அருணாச்சலப் பிரதேசத்துக்கு சொந்தமான இடங்களின் பட்டியலில் 11 குடியிருப்பு பகுதிகள், 12 மலைகள், நான்கு ஆறுகள், ஒரு ஏரி, ஒரு மலைப் பாதை உள்ளது. இவற்றின் பெயர்களை சீன மொழியான மாண்டரின் மொழியிலும், அதேபோல் திபெத்திய மொழியிலும் மாற்றி சீன அரசு அறிவித்து உள்ளது. மேலும், அருணாசல பிரதேசத்தின் 30 இடங்களுக்கு பெயர் மாற்றம் செய்ததை அரசிதழிலும் சீனா வெளியிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள இடங்களின் பெயரை மாற்றும் சீனாவின் நடவடிக்கைக்கு பலமுறை இந்தியா கண்டனம் தெரிவித்து உள்ளது. மேலும் அருணாச்சல பிரதேச மாநிலம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்று கூறி சீனாவின் செயல்களை இந்தியா நிராகரித்து வருகிறது.
இது குறித்து பேசிய மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர், சீனாவின் தொடர்ச்சியான நடவடிக்கைகள் நகைப்புக்குரியது என்றும் அருணாச்சலப் பிரதேச மாநிலம் இந்தியாவின் இயற்கையான மற்றும் ஒருங்கிணைந்த பகுதி என்றும் தெரிவித்தார். மேலும், இன்று நான் உங்கள் வீட்டின் பெயரை மாற்றினால், அது என்னுடையதாகிவிடுமா?” எஸ் ஜெய்சங்கர், அருணாச்சல பிரதேசம் இந்தியாவின் ஒரு மாநிலமாக உள்ளது, அது என்றுமே இருக்கும் என்றும் என்றும் கூறியுள்ளார்.
அதுபோல வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறும்போது, “சீனா தனது ஆதாரமற்ற கூற்றுக்களை எத்தனை முறை வேண்டுமானாலும் திரும்பத் திரும்பச் சொல்லலாம். அந்த நிலையை மாற்றப் போவதில்லை. அருணாச்சலப் பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த மற்றும் பிரிக்க முடியாத பகுதியாக இருந்தது, எப்போதும் இருக்கும், ”என்று தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், சீனாவின் இந்த நடவடிக்கை குறித்து, மத்திய பாஜக அரசை காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றன.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, அருணாச்சல பிரதேசத்தில் உள்ள இடங்களுக்கு பெய்ஜிங்கின் பெயர் மாற்றத்தை விமர்சித்தார், அதே நேரத்தில் இந்த விவகாரம் தொடர்பாக மோடி அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்தார், “சீனா ஆத்திரமூட்டலை நாடும்போது, பிரதமர் மோடி கச்சத்தீவு மீது தவறான கதை மூலம் தஞ்சம் அடைய முயற்சிக்கிறார்! சீனப் பிரதமருடன் இருதரப்புப் பேச்சு வார்த்தைகள் நடத்தியும், இந்தியப் பகுதிகளுக்கு ‘மறுபெயரிடும்’ இந்த அபத்தத்தை நிறுத்த பிரதமர் மோடியால் சீனா மீது எந்த ராஜதந்திர செல்வாக்கையும் பயன்படுத்த முடியவில்லை.
மறுபெயரிடப்பட்ட சூழலில், “பல்வேறு நாடுகளின் பிரதேசங்களை உரிமை கொண்டாடுவதிலும், பகுதிகளின் பெயர்களை மாற்றுவதிலும் சீனா ஒரு வாடிக்கையாகி வருகிறது . சீனாவின் இந்த கேவலமான செயல்களை இந்திய மக்களாகிய நாங்கள் ஒன்றாகக் கண்டிக்கிறோம்.”
சீனாவின் நடவடிக்கைகள் வாஷிங்டன் டிசியில் இருந்தும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளன.
அமெரிக்கா, மார்ச் 9ந்தேதி அன்று வெளியிட்ட ஒரு அறிக்கையில், அருணாச்சலப் பிரதேசத்தை இந்தியப் பிரதேசமாக அங்கீகரிப்பதை மீண்டும் உறுதிப்படுத்தியது. “உண்மையான கட்டுப்பாட்டுக் கோடு வழியாக ஊடுருவல் அல்லது அத்துமீறல்கள், இராணுவம் அல்லது பொதுமக்கள் மூலம் பிராந்திய உரிமைகோரல்களை முன்னெடுப்பதற்கான எந்தவொரு ஒருதலைப்பட்ச முயற்சிகளையும் நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம்,” என்றும், இருப்பினும், சீன வெளியுறவு மற்றும் பாதுகாப்பு அமைச்சகங்கள் அமெரிக்காவின் அறிக்கையை விமர்சித்தன, சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான எல்லைப் பிரச்சினை இருதரப்பு மற்றும் வாஷிங்டனுடன் தொடர்பில்லாதது என்று வலியுறுத்தியது.