சீனாவில் அடுத்த பத்தாண்டுகளில் மேலும் 60 அணு உலைகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
வளர்ந்து வரும் தொழிற்புரட்சியை அடுத்து சீனாவின் தேவைக்காக  அடுத்த பத்தாண்டுகளில் மேலும் 60 அணு உலைகளை கட்ட திட்டமிட்டு உள்ளது.
இந்த செய்தியை  சீன அணுசக்தி தொழில்நுட்ப மையத்தின் துணைத்தலைவர் ஜெங் மிங்குவாங் லண்டனில் நடைபெற்ற உலக அணுசக்தி கூட்டமைப்பின் மாநாட்டில் பேசும்போது தெரிவித்தார்.
1china
சீனாவில் ஏற்கனவே 21 அணுஉலைகள் உள்ளது. மேலும் 28 அணு உலைகள் கட்டப்பட்டு வருகின்றன. தற்போது மேலும் 60 அணு உலைகள் அமைக்க திட்டமிட்டிருப்பது உலக நாடுகளிடையே பிரமிப்பை ஏற்படுத்து உள்ளது.
சீனாவின் மூன்று முன்னணி அணுசக்தி நிறுவனங்களான எஸ்.என்.பி.டி.சி, சி.என்.என்.சி மற்றும் சி.ஜி.என் ஆகியவ இனி வருடத்துக்கு தலா இரண்டு உலைகளை கட்ட முயற்சிக்கும். அவற்றின் பெரும்பாலானவை முழுக்க முழுக்க உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டவையாக இருக்கும் என்று அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.