ஷாங்காய்:  சீனாவின் சோக்கிங் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட திபெத் ஏர்லைன்ஸ் விமானம் திடீரென  தீப்பிடித்தது. இந்த சம்பவத்தில் பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

சோக்கிங் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட திபெத் ஏர்லைன்ஸ் விமானம் ஓடுபாதையில் இருந்து விலகி நின்ற நிலையில், அதன் இறக்கையில் திடீரென தீப்பிடித்தது. இதனால், பீதியடைந்த பயணிகள் சம்பவ இடத்திலிருந்து ஓடினர். உடனே மீட்புமடையும்விரைந்து வந்து அனைவரையும் பத்திரமாக மீட்டனர்.

இந்த பயணிகள் விமானத்தில், 113 பயணிகள் மற்றும் ஒன்பது பணியாளர்கள் இருந்ததாகவும்  சீன விமான நிலையத்தில் ஓடுபாதையில் இருந்து விலகியதால் தீப்பிடித்தது, ஆனால் பயணிகள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் “பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்” என்று விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து காவல்துறை, விமான போக்குவரத்து துறை விசாரணை நடத்தி வருவதாகவும்,   விமானம்  ஓடுபாதையில் இருந்து விலகியதால் தீப்பிடித்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.