டெல்லி: சீனாவும், பாகிஸ்தானும் இணைந்து இந்தியாவை தாக்கும் அபாயம் உள்ளது என டெல்லியில் நடைபெற்ற யாத்திரை பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி கூறினார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ராகுல்காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை தற்போது டெல்லியில் நடைபெற்று வருகிறது. அவரது யாத்திரையின்போது, அவ்வப்போது மத்தியஅரசின் நடவடிக்கையை கடுமையாக விமர்சித்து வருவதுடன், சீனா, பாகிஸ்தான் குறித்தும் பரபரப்பு தகவல்களை பேசி வருகிறார்.இந்த நிலையில், தற்போது, ராகுல்காந்தியின் ஒற்றுமை யாத்திரை இன்று 109வது நாளை எட்டி உள்ளது. 109-வது நாளை எட்டியுள்ளது. யாத்திரையின் ஒரு பகுதியாக டெல்லி செங்கோட்டையில் ராகுல்காந்தி 24ந்தேதி மாலை உரையாற்றினார். முன்னதாக அங்க, இந்திய பாதுகாப்பு படையின் பணியாற்றி ஓய்வு பெற்ற வீரர்களுடன் ராகுல்காந்தி உரையாடினார். இந்த உரையாடல் ராகுல்காந்தியின் யூடியூப் சேனலில் பதிவிடப்பட்டுள்ளது.
இந்த உரையாடலின் போது ராகுல்காந்தி பேசுகையில், சீனாவும், பாகிஸ்தானும் ஒன்றாக தயாராகிக்கொண்டிருக்கின்றன. போர் வந்தால் இரு நாட்டுடன்தான், அவ்வாறாயின் இது இந்தியாவுக்கு அதிக இழப்பாக இருக்கும். இந்தியா இப்போது மிகவும் பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ளது. நான் உங்கள் மீது (ராணுவம்) மரியாதை மட்டும் கொண்டிருக்கவில்லை, அன்பும் அரவணைப்பும் கொண்டுள்ளேன். நீங்கள் இந்த நாட்டை பாதுகாத்துள்ளீர்கள். நீங்கள் இல்லை என்றால் இந்த நாடு இருக்காது. நமக்கு பாகிஸ்தான், சீனா என இரு நாடுகளும் தொல்லைக்கொடுத்து வருகின்றன. இரு நாடுகளுக்குடன் தான். சீனாவும், பாகிஸ்தானும் ராணுவ ரீதியில் மட்டுமின்றி பொருளாதார ரீதியிலும் ஒன்றாக செயல்படுகின்றன’ என்றவர் போர் ஏற்பட்டால், இரு நாடுகளும் இணைந்து நம்மை தாக்கும் வாய்ப்பு உள்ளத, ஏதேனும் போர் நடந்தால், இருவருடனும் நடக்கும், அதனால், நாட்டுக்கு பெரும் இழப்பு ஏற்படும். இந்தியா இப்போது மிகவும் பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ளது என்று ராகுல் காந்தி அச்சம் தெரிவித்தார். ராகுலின் பேச்சு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ராகுலின் யாத்திரைக்கு கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு விடுமுறை விடப்பட்டு உள்ளது. அதன்படி டிசம்பவர் 25ந்தேதி முதல் ஜனவரி 2-ம் தேதி வரை யாத்திரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த இடைவேளைக்கு பிறகு ஜனவரி 3-ம் தேதி யாத்திரை மீண்டும் தொடங்கும் என அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.