பாதுகாப்பு ரகசியத்தைக் கசிய விட்ட சீன ராணுவம்..

சீன நாட்டை சேர்ந்த சூ லூயிங் என்பவர் , அண்மையில் சமூக வலைத்தளத்தில் அந்த நாட்டு ராணுவம் தொடர்பான செய்தி ஒன்றைப் பதிவிட்டிருந்தார்.

‘’இந்திய- சீன எல்லையில் உள்ள கல்வானில் சீன வீரர்கள் உயிர் இழந்ததற்குக் காரணம்  என்ன தெரியுமா? ‘’  DONGFENG OFF ROAD VEHICLE CO. LTD’’ நிறுவனத்தில் இருந்து தரமற்ற ராணுவ வாகனங்களை வங்கி , அந்த வாகனங்களை ;கல்வான்’ பகுதிக்கு அனுப்பியதால் தான் இந்த மரணம் நிகழ்ந்தது’’ எனக் குறிப்பிட்டிருந்தார்.

 அந்த நிறுவனம் அளித்த புகாரையடுத்து வலைத்தளத்தில் வதந்தி பரப்பியதாக சூ லூயிங் கைது செய்யப்பட்டார். அவர் தனது தவற்றுக்கு மன்னிப்பு தெரிவித்து கடிதம் எழுதி கொடுத்துள்ளார்.

 மேற்கண்ட தகவல்கள் அனைத்தும் சீன ராணுவத்தால் நிர்வாகம் செய்யப்படும் இணையத்தில் வெளியாகியுள்ளது.

வழக்கமாகச்  சீன நாட்டு ராணுவ ரகசியங்கள் வெளியே கசிவது இல்லை.

ஆனால் எல்லையில் நடந்த மோதலில் சீன வீரர்கள் இறந்தது, இதற்குத் தரமற்ற வாகனங்களே காரணம் என அந்த நாட்டுப் பிரஜையே பதிவிட்ட தகவலை , சீன ராணுவமே வெளி உலகத்துக்கு , தனது ’ஆன்லைனில்’ பகிரங்கமாக வெளிப்படுத்தியது ஏன்?

’’வதந்தி பரப்பியவர் கைது செய்யப்பட்டதும், மன்னிப்பு கேட்டதும்  மற்றவர்களுக்குப் பாடமாக இருக்க வேண்டும் என்பதால் இந்த விவகாரத்தைச் சீனா வெளியிட்டுள்ளது’’ என்று அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

-பா.பாரதி.