சீனாவில் ஒமைக்ரான் பரவல் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து சாங்சுங் நகரில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
90 லட்சம் பேருக்கு மேல் வசிக்கும் சீனாவின் வடகிழக்கு மாகாணத்தில் உள்ள இந்நகரில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.

இதன் காரணமாக மக்கள் நடமாட்டத்திற்கு தடை விதித்துள்ள அரசு, வீட்டிற்கு ஒருவர் மட்டும் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை வெளியில் வந்து தங்களுக்குத் தேவையான உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களை பெற்று செல்ல வேண்டும்.
மேலும், நகரத்தில் உள்ள அனைவருக்கும் மூன்று முறை கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளது.
அத்தியாவசிய கடைகளைத் தவிர மற்ற கடைகளை மூடவும், இந்த நகருக்கு வரும் அனைத்து விதமான போக்குவரத்துக்கும் தடை விதித்திருக்கிறது.
Patrikai.com official YouTube Channel