ஆகஸ்ட் மாதம் 31-ம் தேதியுடன் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேற இருப்பதாக அறிவிப்பு வெளியானது.
இதனைத் தொடர்ந்து ஆப்கனில் தாலிபான்களின் கை மீண்டும் ஓங்கி இருக்கிறது.
ஆப்கானிஸ்தானின் 85 சதவீதத்திற்கும் அதிகமான நிலப்பரப்பை தாலிபான் தற்போது தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளது.
அல் கொய்தா அமைப்பின் மற்றொரு இயக்கமான கிழக்கு துர்கிஸ்தான் இஸ்லாமிக் இயக்கத்தின் செயல்பாடு ஆப்கானிஸ்தானில் அதிகரிக்கக் கூடும் என்று சீனா கூறியது.
மேலும், இதனால் ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டி அமைந்துள்ள சீனாவின் ஸின்ஜிங் மாகாணத்தில் உள்ள உய்குர் இஸ்லாமிய தீவிரவாதிகளின் புகலிடமாக ஆப்கான் மாறும் என்று சீனா கவலை தெரிவித்திருந்தது.
இந்நிலையில், தாலிபான்களின் செய்தித் தொடர்பாளர் சுஹைல் ஷாஹீன் “சீனா எங்களது நட்பு நாடு, உய்குர் இஸ்லாமிய தீவிரவாதிகளுக்கு நாங்கள் ஆதரவளிக்க மாட்டோம்” என்று கூறினார்.
“சீன முதலீடுகள் மூலம் ஆப்கானிஸ்தானை புனரமைக்கத் தேவையான அனைத்து பேச்சுவார்த்தைகளையும் தொடங்குவோம்” என்று அறிவித்துள்ளார்.