லாசா: சீனாவின் கட்டுப்பாட்டிலுள்ள சுயாட்சிப் பகுதியான திபெத்தில், உள்கட்டமைப்புப் பணிகளை மேற்கொண்டு வருகிறது சீன அரசாங்கம்.
இதுதொடர்பாக கூறப்படுவதாவது; திபெத்தில் மனிதஉரிமை மீறல்களில் ஈடுபடும் சில சீன அதிகாரிகளுக்கு, அமெரிக்கா விசாக்களைக் கட்டுப்படுத்தும் என்று அந்நாட்டு சார்பில் கூறப்பட்டிருந்தது. இந்நிலையில், லடாக்கில் இந்தியாவுடன் ஏற்பட்டுள்ள மோதலைத் தொடர்ந்து, திபெத்தில் கவனம் செலுத்தத் துவங்கியுள்ளது சீனா.
இதனால், கடந்த சில வாரங்களாக திபெத் மீண்டும் முக்கியத்துவம் பெறுகிறது. திபெத்தின் எதிர்கால ஆட்சிப் பொறுப்பு தொடர்பாக, ஒரு கலந்துரையாடல் கூட்டமும் நடைபெற்றது. அதில் சீன அதிபரும் கலந்துகொண்டார்.
திபெத்தில் மேற்கொள்ளப்படும் பெரும்பாலான உள்கட்டமைப்பு வசதிகள் விரைவில் முடிவடையும். சிசுவான் – திபெத் ரயில் பாதை அமைக்கும் பணியும் துவங்கும். இந்த ரயில் பாதை நேபாளத்தையும், திபெத்தையும் இணைக்கும். இத்துடன் திபெத் தன்னாட்சிப் பகுதியில் புதிய துறைமுகம் இன்று அமைக்கப்படும் என்று சீன வட்டாரங்கள் தகவல் தெரிவித்தன.
சிசுவான் திபெத் ரயில் பாதை செங்டுவையும் லாசாவையும் இணைக்கிறது. இதற்கு இதுவரை திபெத் அரசாங்கம் அனுமதி வழங்கவில்லை என்று கூறப்படுகிறது. ஆனாலும், அடுத்த வாரத்தில் இருந்து இதற்கான பணிகள் துவங்கப்படும் என்று சீனா அறிவித்துள்ளது.