ஜப்பானில் வேகம் எடுக்கும் ஹாய்ஷென் சூறாவளி: 8 லட்சம் மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றம்

Must read

டோக்கியோ: ஜப்பானில் ஹாய்ஷென் சூறாவளி காரணமாக 8.1 லட்சம் மக்களை அரசு வெளியேற்றி உள்ளது.

அந்நாட்டின் தெற்கு மற்றும் தென்மேற்கு பகுதி மாகாணங்களை நோக்கி ஹாய்ஷென் என்று பெயரிடப்பட்டுள்ள சூறாவளி நகர்ந்து வருகிறது.   யகுஷிமா தீவில் இருந்து 70 கி.மீ தொலைவில் இந்த சூறாவளி உள்ளது.

மணிக்கு 35 கி.மீட்டர் வேகத்தில் வடக்கு நோக்கி நகர்வதாக அந்நாட்டு வானிலை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். இந்த சூறாவளி மணிக்கு 216 கி.மீட்டர் வரை வேகமெடுக்க கூடும் என்றும் கூறப்படுகிறது.

ஆகையால், அங்கிருந்து 8.1 லட்சம் மக்களை அந்நாட்டு அரசு பாதுகாப்பான பகுதிக்கு கொண்டு சென்று இருக்கிறது.  இதேபோன்று ஜப்பானிலுள்ள பிற 10 மாகாணங்களிலுள்ள 55 லட்சம் மக்களையும் வேறு பகுதிகளுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

More articles

Latest article