சீனா பள்ளிகளில் கைபேசியை உபயோகப்படுத்த தடை

Must read

சீனா:
சீனாவின் ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் மாணவர்கள் மொபைல் போனைப் பயன்படுத்த கூடாது என கல்வி அமைச்சகம் இன்று அறிவித்துள்ளது.

மாணவர்களை இன்டர்நெட் மற்றும் வீடியோகேம் போன்றவற்றிலிருந்து பாதுகாப்பதற்காக சீனாவின் கல்வி அமைச்சகம் இதனை அறிவித்துள்ளது.

ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் கைபேசியை வகுப்பறைக்கு எடுத்துச் செல்லக்கூடாது என அறிவித்த சீன கல்வி அமைச்சகம், ஒருவேளை மாணவர்கள் கைபேசியை பள்ளிக்கு எடுத்து வர வேண்டுமென்றால் அவர்களுடைய பாதுகாவலர்களின் எழுத்துப்பூர்வ ஒப்புதலுடன் சிறப்பு கோரிக்கையை பள்ளி அதிகாரிகளிடம் சமர்ப்பிக்க வேண்டும்,

அவ்வாறு செய்தால் கைபேசியை மாணவர்கள் பள்ளிக்கு எடுத்து வரலாம் ஆனாலும் வகுப்பறைக்குள் எடுத்து செல்லக்கூடாது என சீனாவின் கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது.

More articles

Latest article