இமயமலையில் உள்ள உலகின் மிக உயரமான சிகரமான எவரெஸ்ட் சிகரம், உயரம் குறைந்து வருவதாகவும், இதன் உயரத்தை கணக்கிடும் பணி நடந்து வருவதாகவும், தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், இந்த சிகரம் அமைந்திருக்கும் சீன மற்றும் நேபாள எல்லையில், அவ்விரு நாடுகளையும் சேர்ந்த குழுக்கள் ஆய்வுகளை மேற்கொண்டன.
இதன் அடிப்படையில், எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் கடல் மட்டத்தில் இருந்து 8848.86 மீட்டர் என்று அதிகார பூர்வமாக இன்று அறிவித்துள்ளது.
இதற்கு முன், 8848 என்று இருந்த நிலையில், தொடர் பூகம்பம், பனி சரிவு மற்றும் பனி பாறை உருகுவது ஆகிய காரணங்களால் எவெரெஸ்ட் மலையின் உயரம் குறைந்து வருவதாக சமூக ஆர்வலர்கள் கூறிவந்த நிலையில், தற்போது இதன் உயரம் சுமார் 1 மீட்டர் அதிகரித்திருப்பது அனைவரையும் உற்சாகப்படுத்தியுள்ளது.