டெல்லி: கொரோனா தொற்றின் தீவிர பரவல் ‘காரணமாக பள்ளிக்குழந்தைகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருவதால், சிபிஎஸ்இ தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கோரிக்கை வைத்துள்ளார்.
நாடு முழுவதும் சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு மே 4ந்தேதி தொடங்குகிறது. அதுபோல, 12ம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வுகள் மே 4 முதல் 15ம் தேதி வரையிலும் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதால், பல மாநிலங்களிவல் கல்வி நிலையங்கள் மூடப்பட்டு, பகுதி நேர லாக்டவுனும் அறிவிக்கப்பட்டு உள்ளழது, இதனால் சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்ய வேண்டுமென எதிர்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
இந்த நிலையில், சிபிஎஸ்இ தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வலியுறுத்தி உள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் குறித்த கெஜ்ரிவால், டெல்லியில் 6 லட்சம் மாணவ-மாணவிகள் சிபிஎஸ்இ பொதுத் தேர்வு எழுத உள்ளனர். இந்த தேர்வு பணியில் ஒரு லட்சம் ஆசிரியர்கள் ஈடுபட உள்ளனர்.
ஆனால், மாநிலத்தில் பரவி வரும் தீவிர தொற்று பரவல், பள்ளிக்குழந்தைகளின் வாழ்வாதாரத்தை கடுமையாக பாதித்துள்ளது. இந்த சூழலில் தேர்வு நடைபெற்றதால், மேலும் பெரிய அளவிலான கொரோனா பரவலுக்கு வழிவகுக்கும். தேர்வுகளை எதிர்கொள்ள மாணவ மாணவிகளின் வாழ்க்கையும், ஆரோக்கியமும் மிகவும் முக்கியம். இதனை கருத்தில்கொண்டு சிபிஎஸ்சி பொதுத்தேர்வு ரத்து செய்ய வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி இருக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.