சென்னை:
புரசைவாக்கத்தில் உள்ள அரசு சிறார்  கூர்நோ க்கு   இல்லத்தில் உள்ள சிறுவர்களிடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இதில் பலருக்கு காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இன்று அதிரடியாக  29 சிறுவர்கள் செங்கல்பட்டு அரகூ சிறார் கூர்நோக்கு இல்லத்துக்கு மாற்றப்பட்டனர்.
1boys-conflict-in-kellis-reform-school-20-boys-escaped_SECVPF
சென்னை புரசைவாக்கம் அருகே உள்ள கெல்லீசில்  அரசு சிறார் கூர்நோக்கு இல்லம் உள்ளது. குற்றச் செயல்களில் ஈடுபடும் 18 வயதுக்கு குறைவானவர்களை இங்கு அடைத்து வைத்து சீர்திருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இங்கு மொத்தம் 53 பேர் அடைக்கப்பட்டு உள்ளனர்.
தரை தளத்தில் 20 பேரும், முதல் தளத்தில் 33 பேரும் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். இங்குள்ள இளம் குற்றவாளிகளிடையே அடிக்கடி மோதல் வருவதுண்டு. சென்னையை சேர்ந்த சிறுவர்கள் ஒரு கோஷ்டியாகவும், மற்ற மாவட்டத்தை சேர்ந்தவர்கள் ஒரு கோஷ்டியாகவும் பிரிந்து செயல்பட்டு வந்தனர்.
2-koor_copy
நேற்று சென்னையை சேர்ந்த சிறுவர்களை சிறார் இல்லத்தைவிட்டு தப்பி செல்ல முடிவெடுத்தனர். இதற்காக சிறையில் எதிர் கோஷ்டி சிறுவர்களை அடித்து உடைத்து, சிறார் இல்லத்தின் கதவு, கண்ணாடிகள், விளக்குகளை அடித்து நொறுக்கி கலவரத்தை ஏற்படுத்தி 33 பேர் காம்பவுண்டு சுவரை ஏறி குறித்து தப்பி ஓடினர். வார்டன்கள், காவலர்கள் தப்பியோடும் சிறுவர்களை பிடிக்க முயன்றபோது ஒரு சிலர் தங்களை தாங்களே கழுத்தில் கத்தி மற்றும் பிளேடால் கிழித்து கொண்டு தற்கொலைக்கு முயன்றனர்.
சம்பவத்தை கேள்விபட்டு சிறுவர்களின் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் கூர்நோக்கு இல்லத்தின் முன்பு திரண்டனர். இதனால் அந்த பகுதி பரபரப்பாக  காணப்பட்டது.

இதுபற்றி வார்டன் கெல்லிஸ் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். கீழ்ப்பாக்கம் உதவி கமிஷனர் தலைமையில் போலீஸ் படையுடன் சென்று தப்பி ஓடிய சிறுவர்களை பிடிக்கும் பணியில்  தீவிரமாக ஈடுபட்டனர். அவர்களில்  29 பேரை போலீசார் பிடித்து மீண்டும் சிறார் இல்லத்திற்கு கொண்டு வந்து அடைத்தனர். காயமடைந்த சிறுவர்களை மருத்துவமைனைக்கு அழைத்துச்சென்று சிகிச்சை அளித்தனர். மேலும் தப்பிய ஓடிய 4 சிறுவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
இதன் காரணமாக 29 இளம் குற்றவாளிகள் இன்று காலை சென்னை இல்லத்திலிருந்து செங்கல்பட்டு அரசு சிறார்  கூர்நோக்கு இல்லத்துக்கு   மாற்றம் செய்யப்பட்டனர்.