நகரி:
விபசாரத்தில் தள்ளப்பட இருந்த 11 சிறுமிகளை, ஆந்திர போலீசார் மீட்டனர். இவர்களை கடத்தி வந்த நால்வர் கைது செய்யப்பட்டனர்.
ஆந்திர மாநிலம் கடப்பா ரெயில் நிலையத்தில் 13 வயது முதல் 16 வயது வரை உள்ள 11 சிறுமிகள் சென்னை வரும்  தொடர்வண்டிக்காக  காத்திருந்தனர்.
கூட்டமாக நின்ற அவர்களைப் த ரெயில்வே போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டவே, சிறுமிகளிடம் விசாரணை நடத்தினர். அவர்கள் முன்னுக்குப்பின் முரணான பதில்களை தெரிவித்தனர்.
201607281321270946_four-arrested-try-to-kidnapped-girls_SECVPF.gif
சிறுமிகளிடம் போலீசார் விசாரிப்பதை பார்த்து, அங்கே நின்றுகொண்டிருந்த  பத்து  இளைஞர்கள், ஓட்டம் பிடித்தனர். இதையடுத்து அவர்களை போலீசார் விரட்டிச் சென்றனர், அவர்களில் நான்கு பேர் போலீசாரிடம் சிக்கினர். ஆறு பேர் தப்பிவிட்டனர்.
சிக்கிய நால்வரிடம்  விசாரணை செய்தபோது,  சிறுமிகளை ஏமாற்றி சென்னைக்கு அழைத்து வந்து விபசாரத்தில் ஈடுபடுத்த முயன்றது தெரிய வந்தது.   இதையடுத்து  நான்கு பேரும் கைது செய்யப்பட்டனர்.
மீட்கப்பட்ட சிறுமிகள் கடப்பா மாவட்டம் கொருமாமில்லா கிராமத்தைச் சேர்ந்தவர்கள். வறுமையான குடும்பத்தைச் சேர்ந்த அவர்களை, சென்னையில் வேலை வாங்கித்தருவாத சொல்லி ஏமாற்றி அழைத்துவந்திருக்கின்றார்கள்.
காவல்துறையினரின் நடவடிக்கையால் 11 சிறுமிகளும் தப்பினர்.
அதே நேரம், “இதுபோன்று கடத்தல்காரர்கள் சிக்கும்போது, அவர்களை மட்டும் கைது செய்வதோடு காவல்துறையினர் நின்றுவிடுகிறார்கள்.  அவர்களை இயக்குபம் கடத்தல் தாதாக்களை காவல்துறையினர் நெருங்குவதே இல்லை. ஆகவேதான் விபசாரத்துக்காகவும், உடல் உறுப்புகளை திருடுவதற்காகவும் சிறுவர், சிறுமியர் கடத்தப்படுவது தொடர்ந்துகொண்டே இருக்கிறது” என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.