மதுரை: தமிழகத்தில் குழந்தை தொழிலாளர்களின் எண்ணிக்கை 180% அதிகரித்து உள்ளது வேதனை அளிக்கிறது என உயர்நீதிமன்றம் மதுரை கிளை தெரிவித்துள்ளது.
கொரோனா பெருந்தொற்றால், கல்வி நிலயங்கள் மூடப்பட்டதுடன், பொருளாதார பாதிப்பும் ஏற்பட்டதால், ஏழை எளிய மக்களின் குழந்தைகள், வேலைவாய்ப்பைத் தேடி செல்லும் நிலை உருவானது. பல பின்தங்கிய பகுதிகளில் உள்ள குழந்தைகள் மற்றும் மாணவர்கள் தங்கிளின் கல்வியைத் தொடர முடியாத ஏற்பட்டது. இதன் காரணமாக உலகம் முழுவதும் குழந்தை தொழிலாளர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது.
பின்னர் கொரோனா கட்டுக்குள் வந்த நிலையில், மீண்டும் குழந்தைகளை அழைக்கும் பணி நடைபெற்றது. அதன்படி, யூனிசெஃப் வெளியிட்ட அறிக்கையில், இந்தியாவில் கடந்த ஆண்டு அதிக குழந்தைத் தொழிலாளர்கள் மீட்கப்பட்ட மாநிலங்களில் தமிழகம் 2-வது இடத்தில் இருப்பதாக தெரிவித்திருந்தது. இருந்தாலும் இன்னும் பல ஆயிரம் குழந்தைகள், பல்வேறு பணிகளில் தொடர்ந்து வருகின்றனர்.
இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிமன்றம், குழந்தை தொழிலாளர்கள் முறையை முற்றிலுமாக ஒழிக்க ஒன்றிய, மாநில அரசுகளின் நடவடிக்கை தேவைப்படுகிறது என்றவர், தமிழகத்தில் குழந்தை தொழிலாளர்களின் எண்ணிக்கை 180% அதிகரித்து உள்ளது வேதனை தெரிவித்ததாக கூறியவர், குழந்தை தொழிலாளர்கள் உருவாவதை தடுப்பதை தடுக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை தொடர்பாக மத்திய மாநில அரசுகள் பதில் தர உத்தரவிட்டு உள்ளது.