சிக்குன்குனியா வைரஸுக்கு எதிரான தடுப்பூசியாக அங்கீகரிக்கப்பட்ட ‘ஐஎக்ஸ்சிக்’ (Ixchiq) மருந்து கடுமையான பக்கவிளைவுகளை ஏற்படுத்துவதாகக் கூறி அமெரிக்கா தடை விதித்துள்ளது.

பிரெஞ்சு நிறுவனமான வால்னேவா தயாரிக்கும் இந்த மருந்து அமெரிக்க சுகாதார அதிகாரிகளால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவன அதிகாரிகள் இன்று தெரிவித்துள்ளனர்.

கொசு மூலம் பரவும் சிக்கன்குனியா வைரசுக்கு எதிராக அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அங்கீகரித்துள்ள இரண்டு தடுப்பூசிகளில் Ixchiq-க்கும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

2023 ஆம் ஆண்டில் இந்த தடுப்பூசிக்கு ஒப்புதல் வழங்கப்பட்ட நிலையில், குறிப்பாக வயதான நோயாளிகளிடம் அதன் பக்கவிளைவுகள், குறித்த அறிக்கைகள் கவலையளிப்பதாக சுகாதாரத் துறை கூறியுள்ளது.

இந்த வகையான வைரஸ் முக்கியமாக வெப்பமண்டல மற்றும் மிதவெப்ப மண்டல பகுதிகளில் காணப்படுகிறது, ஆனால் சமீபமாக காலநிலை மாற்றம் சிக்குன்குனியாவைப் பரப்பும் கொசுக்களை புதிய பகுதிகளுக்குத் தள்ளுவதால், சிக்குன்குனியா ஒரு சாத்தியமான எதிர்கால தொற்றுநோய் அச்சுறுத்தலாக இருக்கலாம் என்று பொது சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

டெங்கு காய்ச்சல் மற்றும் ஜிகா வைரஸின் அறிகுறிகளைப் போலவே உள்ளன, அதிக காய்ச்சல் மற்றும் கடுமையான மூட்டு வலி ஆகியவை ஏற்படும்.

சிக்குன்குனியா அரிதாகவே ஆபத்தானது, இருப்பினும் குழந்தைகள் மற்றும் வயதானவர்களுக்கு இறப்பு ஆபத்து அதிகமாக உள்ளது.

ஜூலை மாதம், உலக சுகாதார நிறுவனம் ஒரு பெரிய சிக்குன்குனியா தொற்றுநோயின் அபாயங்கள் குறித்து எச்சரித்து, அவசர நடவடிக்கை எடுக்க அழைப்பு விடுத்துள்ளது.