சென்னை:  விஜய் தலைமையில் நடைபெற்ற தவெக செயற்குழுக் கூட்டத்தில் முதல்வர் வேட்பாளர் விஜய்  என்றும்,  தி.மு.க – பா.ஜ.கவுடன் என்றுமே கூட்டணி இல்லை என்று  தவெக கூட்டத்தில்  தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

2026 பேரவைத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல்வர் வேட்பாளர் விஜய் என்றும் கூட்டணி குறித்து விஜய்க்கு முழு அதிகாரம் வழங்கப்படுவதாகவும் தவெக செயற்குழுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தலைமையில் கட்சியின் செயற்குழுக் கூட்டம் சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. கட்சியின் நிர்வாகிகள், பொறுப்பாளர்கள், செயற்குழு உறுப்பினர்கள் இதில் கலந்துகொண்டுள்ளனர்.

கூட்டத்தில் கட்சியின் பணிகள், முதல்வர் வேட்பாளர் என பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

அதன்படி, தமிழக வெற்றிக் கழகத்தின் முதல்வர் வேட்பாளர் விஜய் என்று செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தவெக தலைமையில்தான் கூட்டணி, கூட்டணி குறித்து முடிவெடுக்க விஜய்க்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக் கிறது

. முன்னதாக தவெக தலைவர் விஜய், வருகிற செப்டம்பர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்வார், முன்னதாக ஆகஸ்ட் மாதம் தவெக 2-வது மாநில மாநாடு நடைபெறும் என செயற்குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

தவெக 2-வது மாநாடு திருச்சி அல்லது மதுரையில் நடைபெறும் என்று கூறப்படுகிறது.

இந்த கூட்டத்தில் பேசிய தவெக தலைவர் நடிகர் விஜய்,  தி.மு.க – பா.ஜ.கவுடன் என்றுமே கூட்டணி இல்லை! தவெக கூட்டத்தில்  உறுதியாக தெரிவித்தார்.

கொள்கை எதிரியான பா.ஜ.க.வுடன் நேரடியாகவும், மறைமுகமாகவும் என்றைக்கும் கூட்டணி கிடையாது என்று கூறியதுடன்,  . தமிழ்நாட்டின் தலைவர்களை வைத்து பா.ஜ.க. செய்யும் அரசியல் வெற்றிபெறாது என்று கூறினார்.

சுயநல அரசியல் லாபங்களுக்காக பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைக்க தமிழக வெற்றிக் கழகம் ஒன்றும் தி.மு.க.வோ, அ.தி.மு.கவோ இல்லை என்றும் சாடினார்.