லக்னோ:
உத்தரபிரதேச சட்டமன்ற மேல்சபை தேர்தலில் முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்பட 13 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

உத்தரபிரதேசத்தில் 100 உறுப்பினர்கள் கொண்ட மேல்சபையில் காலியாக உள்ள உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடந்தது. இதில் ஆளும் பா.ஜ. கூட்டணி கட்சிகள் சார்பில் முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட 13 பேர் போட்டியிட்டனர்.
வேட்பு மனுவை வாபஸ் பெற கடைசி நாளான இன்று யாரும் வாபஸ் பெறவில்லை. இதையடுத்து 13 பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
Patrikai.com official YouTube Channel