புதுச்சேரி:.

புதுச்சேரியில் கவர்னருக்கும், முதல்வருக்கும் இடையே நடைபெற்று வரும் அதிகாரப்போட்டி உச்சகட்டத்தை அடைந்துள்ளது.

இதையடுத்து, கவர்னர் அதிகாரத்திற்கு உட்பட்டு நடக்கா விட்டால், விளைவுகளை சந்திக்க நேரிடும் பகிரங்கமாக கிரண்பேடிக்கு முதல்வர் நாராயணசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

புதுச்சேரி மாநில கவர்னராக முன்னாள் ஐபிஎஸ் கிரண்பேடி நியமனம் செய்யப்பட்டதில் இருந்து அதிகார மோதல்கள் நீடித்து வருகிறது.

முதல்வர் மற்றும் அமைச்சர்களின் அதிகாரத்தில் கவர்னர் தலையிடுவதாக குற்றச்சாட்டு கூறப்பட்டது. மேலும், அதிகாரிகள் நியமன விவகாரத்திலும் தலையிட்டு பிரச்சினை செய்வதாக கூறப்பட்டது.

இந்நிலையில், இன்றையசட்டசபையில் பேசிய முதல்வர் நாராயணசாமி,  கவர்னர் கிரண்பேடி நேரடியாக குற்றச்சாட்டு கூறி பேசினார்.

அப்போது, கவர்னர்  கிரண்பேடிக்கு எதிராக மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு கடிதம் எழுதி உள்ளதாகவும்,  கிரண்பேடி  தேவையில்லாமல் எல்லா கோப்புக்களையும் மத்திய அரசுக்கு அனுப்பி வருகிறார்.

வெளிப்படை தன்மை என்ற பெயரில் அரசு ரகசியங்களை வெளியிட்டு ரகசியகாப்பு பிரமானத்தை மீறுகிறார் எனவும் கிரண்பேடி மீது நாராயணசாமி குற்றம்சாட்டினார்.

மேலும், புதுச்சேரி அமைச்சரவை ஒப்புதல் இன்றியும், அமைச்சர்கள் உத்தரவின்றியும் அரசு அதிகாரிகள் யாரும் கிரண்பேடியை சந்திக்க கூடாது என அதிரடி உத்தரவிட்டுள்ளார்.

கவர்னர் கிரண்பேடி, தொகுதி எம்எல்ஏக்கள் அனுமதி இல்லாமல் தொகுதிக்குள் வந்தால் எம்.எல்.ஏ.,க்கள் மறியலில் ஈடுபட வேண்டும் எனவும் அறிவுறுத்தி உள்ளார்.

கவர்னர்  அதிகாரத்திற்கு உட்பட்டு நடக்காவிட்டால், விளைவுகளை சந்திக்க நேரிடும் என வெளிப்படையாகவும் கிரண்பேடியை நாராயணசாமி எச்சரித்துள்ளார்.

இது புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.