சென்னை: தமிழ்நாட்டில் போதை கலாசசாரத்தை தடுக்கும் முயற்சியாக போதை பொருள் விற்பவர்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்ய தமிழ்நாடு முதல்வர் விஜய் அதிரடி எடுத்துள்ளார்.

கடந்த திமுக ஆட்சி காலத்தில் மாநிலம் முழுவதும்போதைபொருள் நடமாட்டம் கொட்டிகட்டி பறந்தது. இதனால் பல பாலியல் சம்பவங்களும் அரங்கேறின. இதை தடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல முறை வலியுறுத்தியும் முறையான நடவடிக்கை மேற்கொள்ளப்படாத நிலையில், புதிய ஆட்சியிலாவது போதை கலாச்சாரத்துக்கு முடிவு கட்ட வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், விஜய் தலைமயிலான புதிய அரசு, போதை பொருள் விநியோகத்தை தடுக்க தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறது. அந்த வகையில், தமிழக காவல்துறையில் புதிதாக உருவாக்கப்பட்டிருக்கும் போதைப்பொருள் தடுப்பு படைக்கு, போதைப்பொருட்களை விற்பவர்களின் சொத்துக்களை முடக்கவும், பறிமுதல் செய்யவும் அதிகாரம் வழங்கி புதிய அரசாணை பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.
விஜய் முதல்வராக பதவி ஏற்றதும், ஏற்கனவே கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில், போதைப்பொருட்கள் தடுப்புக்கு மாவட்டம் தோறும் சிறப்பு படையை அமைக்கும் உத்தரவில் விஜய் கையெழுத்திட்டிருந்தார்.
இந்த உத்தரவை தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும், மாவட்டத்திற்கு ஒரு போதைப்பொருள் தடுப்பு பிரத்யேக காவல் நிலையங்கள் என 37 காவல் நிலையங்களும், இது தவிர 9 காவல் ஆணையரகங்களில் 28 காவல் நிலையங்கள் என மொத்தம் 65 பிரத்யேக காவல் நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
இந்த காவல் நிலையங்களின் பணி, முழுக்க முழுக்க போதைப்பொருட்கள் விநியோகத்தை கட்டுப்படுத்துவதுதான். முதலமைச்சரின் நேரடி கட்டுப்பாட்டில் இந்த படை இயங்கும். அதே நேரம் இந்த படைக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டிருப்பதாக அரசாணையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
அதாவது இந்த படை, போதை பொருள் நடமாட்டம் குறித்த உளவு தகவல்களை சேகரிப்பது, போதைப்பொருள் விற்பனை குறித்து இணையதளம் மூலம் கண்காணிப்பது, இது தொடர்பான வழக்குகளை பதிவு செய்வது போன்ற வேலைகளை செய்யும்.
இது தவிர, போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடுவோர், அவர்களது உறவினர்களின் அசை மற்றும் அசையா சொத்துக்களை பறிமுதல் செய்வது அல்லது முடக்க நடவடிக்கை எடுப்பது, நீதிமன்ற மூலம் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுக் கொடுப்பது போன்ற பணிகளில் இவர்கள் ஈடுபடுவார்கள் என்று அரசாணையில் தெளிவுபடுத்தப்பட்டிருக்கிறது.
தமிழக காவல்துறையை பொறுத்தவரையில், ஏற்கனவே மதுவிலக்கு அமலாக்க பிரிவு, போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது புதியதாக உருவாக்கப்பட்டிருக்கும் போதைப்பொருள் தடுப்பு படை, அந்த இரு பிரிவுகளில் இருந்தும் தனித்துவமாக செயல்படும் என்றும் காவல்துறையினர் தெரிவித்திருக்கின்றனர்.
ஏற்கனவே உத்தர பிரதேசத்தில் ஆட்சி செய்யும் யோகி தலைமையிலான பாஜசு அரசு பதவிக்கு வந்த பிறகு, போதை பொருள் விற்பவர்கள் சொத்துக்கள் முடக்கப்படு கின்றன. போதைப்பொருள் மற்றும் மனமயக்கப் பொருட்கள் சட்டம் (NDPS Act), போதைப்பொருள் கடத்தல் மூலம் சம்பாதித்த சொத்துக்கள், வங்கி கணக்குகள் மற்றும் நிலங்களை முடக்கவும், பறிமுதல் செய்யவும் அரசுக்கு அதிகாரம் அளிக்கிறது. அதுபோல தற்போது தவெக அரசும், போதை கலாச்சாரத்தை ஒடுக்க, போதை பொருட்கள் விற்பவர்கள், கடத்துபவர்களின் சொத்துக்களை முடக்க நடவடிக்கை எடுத்துள்ளது.
[youtube-feed feed=1]