சென்னை: தீபாவளியையொட்டி, சென்னையில் தங்கியியுள்ள சிருங்கேரி சன்னிதானத்திடம் முதலமைச்சர் ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் ஆசி பெற்றார். இது வியப்பை ஏற்படுத்தி உள்ளது.

சனாதனத்தை கொசுவைப்போல ஒழிப்பேன் என்று வீராவசனம் பேசிய  துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின் அம்மாவான துர்கா  ஸ்டாலின் சனாதனத்தை வளர்த்து வரும் மடாதிபதியை சந்தித்து ஆசி பெற்றது சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்பட்டு வருகிறது.

கூரை ஏறி கோழி பிடிக்க தெரியாதவனெல்லாம் வானம் ஏறி வைகுண்டம் போவானுகளாம். சனாதனத்தை டெங்கு மலேரியா போல ஒழிக்கணும்னு சொன்னவங்க தங்கள் வீட்டுக்குள்ளேயே வேர் விட்டு வளர்ந்திருக்கும் சனாதனத்தை ஆட்டியோ அசைத்தோ பார்க்க முடியாது என்பதுதான் சனாதனத்தின் சிறப்பு வலிமை.

உதயநிதி ஸ்டாலின் ஊரை ஏமாற்ற போட்ட வேஷம் பல்லிளிக்கிறது என்பது அவமானத்தின் உச்சகட்டம் என சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்பட்டு வருகிறது.

ஸ்ரீ சிருங்கேரி சாரதா பீடத்தின் அருட்தந்தை ஜகத்குரு ஸ்ரீ விதுசேகர பாரதி சன்னிதானம்  இவர் நாடு முழுவதும் விஜய யாத்திரை மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியில் சென்னை வந்துள்ளர். மயிலாப்பூர் டாக்டர் ஆர்.கே.சாலையில் உள்ள சுதர்மா பங்களாவில் தங்கியிருந்து பக்தர்களுக்கு ஆசி வழங்கி வருகிறார. அவர் நவம்பர் 6ந்தேதி வரை சென்னையில் தங்கியிருப்பார் என்ற அறிவிக்கப்பட்டுஉள்ளது. அவரது சென்னைக்கான யாத்திரை இந்த இடத்தில் நவ.6-ஆம் தேதி நிறைவடைகிறது.

இந்த நிலையில், தீபாவளியையொட்டி, நேற்று  சுதர்மா பங்களாவில்  காலை 8:00 மணிக்கு சகஸ்ர சண்டி ஹோமம் நடந்தது.  அதைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, சன்னிதானத்திடம் ஆசி பெற்றனர். பின், மாலை 4.30 மணிக்கு சுவாமிநாதன் குழுவினர் பஜனை பாடல்களை பாடினர். தொடர்ந்து, ஸ்ரீஅபிநவ வித்யாதீர்த்த மகாசுவாமிகளின் ஜெயந்தி விழா நடந்தது.

இதையொட்டி, முதலமைச்சர் ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் நேற்று மாலை சுமார் 5.50 மணியளவில் சுதர்மா இல்லத்திற்கு வந்து,    சிருங்கேரி சன்னிதானம் ஜகத்குரு ஸ்ரீ விதுசேகர பாரதி சன்னிதானத்தை வணங்கி ஆசி பெற்றார்.  அதைத்தொடர்ந்து அங்கு நடைபெட்றற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு,  சுமார் 20 நிமிடங்கள்சுவாமி தரிசனம் செய்து விட்டு, பின்னர் வீடு திரும்பினார்.