சென்னை: சென்னையில் இன்று நடைபெறும் தமிழ்நாடு டாக்டர் ஜெ ஜெயலலிதா இசை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்று மாணவர்களுக்கு பட்டங்களை வழங்குகிறார்.
தமிழ்நாடு டாக்டா் ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலை பல்கலைக்கழகத்தின் முதலாண்டு பட்டமளிப்பு விழா கடந்த 2020ம் ஆண்டு சென்னை சேப்பாக்கம் கலைவாணா் அரங்கில் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து 2வது பட்ட மளிப்பு விழா இன்று சென்னை கலைவாணர் அரங்கில் காலை 10.30 மணி அளவில் நடைபெறுகிறது. இதில், பல்கலைக்கழக துணைவேந்தர், ஆட்சி மன்ற குழு உறுப்பினர்கள் கலந்துகொள்கின்றனர்.
இந்த நிகழ்ச்சியில் பல்கலைக்கழக வேந்தர் மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு மாணவ மாணவிகளுக்கு படங்களை வழங்கி சிறப்புரை ஆற்றுகிறார். இதற்கான அறிவிப்பை பல்கலைக்கழக துணைவேந்தர் சவுமியா வெளியிட்டுள்ளார்
குரு குலக்கல்வி முறையாக இருந்த இசைக் கல்வியை, அனைத்து மக்களும் தெரிந்துகொள்ளும் வகையில் இந்த இசைப் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. ஓவியம், சிற்பக் கலை, இசை, வாய்ப்பாட்டு உள்ளிட்ட பல கலை சாா்ந்த படிப்புகளை ஒருங்கே கொண்ட இந்தப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கல்லூரிகளுக்கான இந்த பட்டமளிப்பு விழா, பல்கலைக்கழக வேந்தரும், தமிழக முதல்வருமான ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது.